37 |
முன்னி ருந்தனர்
காலமு டிந்தபின்
பின்னி ருந்தனர் பேரெழிற் பாந்தளுக்
கென்னி ருந்தனிச் சூட்சியி னேவலான்
மன்னி ருந்தன மந்திர மாக்கினார். |
|
"முன் இருந்தனர்
காலம் முடிந்த பின்,
பின் இருந்தனர், பேர் எழில் பாந்தளுக்கு,
என் இரும் தனிச் சூட்சியின் ஏவலால்,
மன் இருந்தன மந்திரம் ஆக்கினார். |
"முன் வாழ்ந்திருந்தவர்
காலம் முடிந்தபின், அவருக்குப் பின்
வாழ்ந்திருந்தவர், எனது பெரிய ஒப்பற்ற தந்திரத்தின் தூண்டுதலால், பேர்
அழகுள்ள அப்பாம்புக்கு நிலைபெற்ற கோவிலொன்றைக் கட்டினர்.
பெருமை + எழில்
- பெரு + எழில் - பேர் + எழில் = பேரெழில்
38 |
மாக நாதன்வ
னைந்தவை மாற்றியந்
நாக மாக்கிய நன்றிய தென்றுநா
னாக நாதனெ னும்பெயர் நாட்டிக்கே
டாக நாகத்த ருச்சனை யாயதே. |
|
"மாக நாதன்
வனைந்தவை மாற்றி, அந்
நாகம் ஆக்கிய நன்றி அது என்று, நான்
நாக நாதன் எனும் பெயர் நாட்டி, கேடு
ஆக, நாகத்து அருச்சனை ஆயதே. |
"வானுலக ஆண்டவன்
செய்தவற்றை மறைத்து, அது அந்த நாகமே
செய்த நன்மை என்று காட்டி, அப்பாம்பிற்கு நாகநாதன் என்ற பெயரும்
நானே நாட்டினேன். இவ்வாறு, பாவமாகிய கேடு விளையுமாறு, உலகில்
நாக வழிபாடு ஏற்பட்டது.
39 |
நாக நாதனை நம்பலி னாகவா
யாக மாறுமென் றாகமம் போன்றுநற்
பாக மாய்விடம் மூடிய பற்கதை
யாக மாநிலத் தர்ச்சனை நாட்டினேன். |
|