"நாக நாதனை
நம்பலின், நாக வாய்
ஆக மாறும் என்று, ஆகமம் போன்று, நல்
பாகம் மாய் விடம் மூடிய பல் கதை
ஆக, மா நிலத்து அர்ச்சனை நாட்டினேன். |
"நாக நாதனை
நம்பி வழிபடுவதனால், பாம்பின் வாயில் பிறக்கும்
நஞ்சு முற்றிலும் மாறும் என்று, வேத நூல் போன்று, மாய்க்கும் நஞ்சை
நல்ல சருக்கைப் பாகில் பொதிந்து மூடிய தன்மையாய்ப் பல கதைகளும்
ஏற்படுத்தி, பெரிய நிலவுலகெங்கும் நாக வழிபாட்டை நாட்டினேன். 'வாய்'
வாயிற் பிறந்த நஞ்சுக்கு ஆகு பெயர். 'பாகம்' - பாகு: 'அம்' சாரியை
பெற்று நின்றது.
40 |
ஆண்டங்
காயிரத் தைம்பத்தி ரண்டுபோய்
மாண்ட கோனெசைக் கீயன்ம னம்பொறா
பூண்ட பாந்தளைப் பூழியை யாக்கினு
மீண்டவ் வர்ச்சனை பற்பலர் விட்டிலார். |
|
"ஆண்டு அங்கு
ஆயிரத்து ஐம்பத்திரண்டு போய்,
மாண்ட கோன் எசைக்கீயன் மனம் பொறா,
பூண்ட பாந்தளைப் பூழியை ஆக்கினும்,
ஈண்டு அவ் அர்ச்சனை பற் பலர் விட்டு இலார். |
"அவ்வுருவம் சமைத்து
ஆயிரத்தைம்பத்திரண்டு ஆண்டுகள் கழிந்து,
மாண்புள்ள மன்னன் எசைக்கீயன் அவ்வழிபாடு கண்டு மனம் பொறாமல்,
தெய்வக் கோலம் பூண்ட அப்பாம்பைப் பொடித்துப் புழுதியாகச் செய்தான்.
எனினும், இவ்வுலகில் அவ்வழிபாட்டைப் பற்பலர் விடாது கொள்வாராயினர்.
இச் செய்தி
ப. ஏ., II அரசர் ஆகமம், 18 : 4 காண்க.
41 |
அறம்வ ழங்கிட வன்பொடு நாதனப்
புறம்வ ழங்கிய வின்னவை பொய்யொடு
மறம்வ ழங்கிட மாற்றிய பின்னரென்
றிறம்வ ழங்கில சீருமுண் டோவென்றான். |
|