|
"அறம் வழங்கிட
அன்பொடு நாதன் அப்
புறம் வழங்கிய இன்னவை, பொய்யொடு
மறம் வழங்கிட மாற்றிய பின்னர், என்
திறம் வழங்கு இல சீரும் உண்டோ?" என்றான். |
"அறம் நிலைபெறுமாறு
ஆண்டவன் அன்போடு அவ்விடத்து
அருளிய இவற்றையெல்லாம், பொய்யோடு கலந்து பாவமே வழங்குமாறு
நான் மாற்றிய பின்னர், என் திறத்தால் நடைபெறுதல் இல்லாத சிறந்த
காரியமும் உண்டோ?" என்றான் வின்றான்.
சத்தனாசு
கூற்று
| 42 |
பித்த னாகமம்
பேசிய தன்மையி,
லத்த னாதுரை கேட்டரும் பட்டிமை
மொய்த்த நாளிமு கத்தரில் முற்றிய
சத்த னாசெனும் பேயிவை சாற்றினான். |
| |
பித்தன் ஆகமம்
பேசிய தன்மையில்,
அத் தனாது உரை கேட்டு, அரும் பட்டிமை
மொய்த்த நாளி முகத்து அரில் முற்றிய
சத்தனாசு எனும் பேய், இவை சாற்றினான்: |
பித்தன் ஒருவன்
வேத நூலை எடுத்துப் பேசிய தன்மையாக,
வின்றான் பேசிய அந்தத் தனது உரையைக் கேட்டு, அரிய வஞ்சகம்
நிறைந்த நாய் முகத்தோடு பாவங்களில் முதிர்ந்த சத்தனாசு எனும்
பேய், பின்வரும் இவற்றைப் பேசத் தொடங்கினான் :
'தனாது'
- தனது : இங்கு 'அவனது' என்ற பொருளில் நின்றது.
'பேய்' என்ற சொல் உயர்திணைக்கு உரியதாய், இடத்திற்கு ஏற்ப,
உயர்திணை முடிபும் அஃறிணை முடிபும் பெறுதற்கு உரியது. இங்கு
உயர்திணை முடிபு கொண்டது.
-
விளங்காய், கூவிளங்காய், கூவிளங்காய், தேமா
|