7
|
அறிவின்மை
யுறவின்மை யறத்தி னின்மை யங்கட்சென்
னெறியின்மை நெறிதொலைக்கு முறுதி யின்மை நெறிதன்னிற்
பறியின்மை சார்பின்மை தன்பா லின்மை பரிசல்லாற்
பிறிவின்மை யோர்ந்துளைந்தா னுளைந்து மீண்டே பிரிவுற்றான். |
|
அறிவு இன்மை,
உறவு இன்மை, அறத்தின் இன்மை, அங்கண் செல்
நெறி இன்மை, நெறி தொலைக்கும் உறுதி இன்மை, நெறி தன்னில்
பறி இன்மை, சார்பு இன்மை, தன்பால் இன்மை பரிசு அல்லால்
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான்; உளைந்து, மீண்டே பிரிவு
உற்றான். |
அங்கு
அறிமுகமானவர் இல்லாமை, உறவினர் இல்லாமை,
அறவுணர்வு கொண்டவர் இல்லாமை, அங்குச் செல்லும் வழித் தெரியாமை,
வழியைக் கடந்து தொலைக்கும் துணை இல்லாமை, வழியில் பொன்
இல்லாமை, பிற சார்பு எதுவும் இல்லாமை, தன்னிடம் வறுமைத்தன்மையே
அல்லாமல் வேறொன்றும் இல்லாமை - இவற்றையெல்லாம் நினைந்து
வருந்தினான்; இவ்வாறெல்லாம் சிறிது நேரம் வருந்தியும், பின் அங்கிருந்து
பிரிந்து மரியாளிடம் சென்றான்.
எசித்துப்
பயணம்
-
விளம், - விளம், - மா, கூவிளம்
8 |
வேரியந்
தாரினான் விரைந்தெ ழுந்தனன்
மாரியந் தாரையின் வளர்கண் டாரைநீர்
நேரியந் துணைவியை நேடி நாயகன்
றேரியங் கேவிய பணியைச் செப்பினான். |
|
வேரி அம் தாரினான்
விரைந்து எழுந்தனன்;
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர்
நேரி, அம் துணைவியை நேடி, நாயகன்
தேரி அங்கு ஏவிய பணியைச் செப்பினான். |
|