|
| 47 |
வஞ்சினரொ
ருங்குதொழு மன்னரச மாயை
யெஞ்சினனி ளைத்தனனி னைத்தவொரு கைமைக்
கஞ்சினன றைந்தவைய மைந்தயர வேண்டா
துஞ்சினர்து ளங்குவர்கோ லென்றுரைது வைத்தான். |
| |
"வஞ்சினர் ஒருங்கு
தொழு மன் அரச, மாயை
எஞ்சினன், இளைத்தனன், இளைத்த ஒரு கைமைக்கு
அஞ்சினன் அறைந்தவை அயர வேண்டா;
துஞ்சினர் துளங்குவர் கொல்?" என்று உரை
துவைத்தான். |
"வீரர் அனைவரும்
ஒருங்கே தொழும் நிலையான மன்னனே,
மாயையில் மெலிந்தவனும், முயற்சியில் இளைத்தவனும், இளைத்த ஒரு
கைம் பெண்ணுக்குமே அஞ்சுபவனுமாகிய ஒருவன் சொல்லியவற்றைக்
கேட்டு மனம் தளர வேண்டாம்; சோம்பியிருந்தவர் என்றேனும் விளக்கம்
கொள்வரோ?" என்று அவன் அடித்துப் பேசினான்.
'கைமை' கைம்பெண்ணுக்கு
ஆகிவந்ததால் ஆகு பெயர்.
| 48 |
என்றலொடு
நொந்துமுகி லீன்றவுரு மென்னா
நின்றவனி கழ்ந்தெனைநி கர்த்தபிண நீயோ
குன்றவெறி கொள்ளொளிரு ணுங்கெனமு
ளைத்தாய்
வென்றரவ ளர்ந்தமிட லோயெனவு ரைத்தான். |
| |
என்றலொடு நொந்து,
முகில் ஈன்ற உரும் என்னா
நின்றவன் இகழ்ந்து, "எனை நிகர்த்த பிணம் நீயோ?
குன்ற வெறி கொள் ஒளி, குணுங்கு என முளைத்தாய்!
வென் தர வளர்ந்த மிடலோய்!" என உரைத்தான். |
என்று இவ்வாறு
திரங்கரன் கூறியது கேட்டு நொந்து, மேகம்
பிறப்பித்த இடி போல் நின்ற சத்தனாசு அவனை இகழ்ந்து, "முதுகு காட்டி
ஓடுவதற்கென்றே வளர்ந்த வலிமை படைத்தவனே! எனக்கு நிகரான
பேயோ நீ? பேயினம் கொண்ட புகழ் குன்றுமாறு, நீயும் ஒரு பேயென்று
தோன்றியுள்ளாய்!", என்று கூறினான்.
வென் - 'வெரிந்'
என்பதன் மரூஉ மொழியாகிய 'வெந்' என்பது,
எதுகைப் பொருட்டு இவ்வாறு நின்றது. 'வெறி கொள் ஒளி குன்றக்
குணுங்கு என முளைத்தாய்' என மாற்றிக் கூட்டுக.
|