|
'பிரண்டனர்
- 'புரண்டனர்' என்பது, மோனைப் பொருட்டு, திரிந்து
நின்றது. முதற்போலி எனக் கொள்ளலும் ஆம். 'விசும்புமென' என்பதன்
உம்மையைப் பிரித்து, 'விசும்பு எனவும்' எனச் சேர்த்துக் கூட்டுக.
| 53 |
எழுந்திருவர்
வவ்வியம ருப்பிணைகை விள்ளா
வழுந்திருவ டிக்கொடுவ கத்தினையு தைப்பக்
கழுந்திருகு கொம்பிருவர் கையொடுபெ யர்ந்தே
விழுந்திருவர் வீழ்ந்தனருள் வெள்கினர்
வெகுண்டார். |
| |
எழுந்து இருவர்,
வவ்விய மருப்பு இணை கை விள்ளா,
அழுந்து இரு அடிக் கொடு அகத்தினை உதைப்ப,
கழும் திருகு கொம்பு இருவர் கையொடு பெயர்ந்தே
விழுந்து, இருவர் வீழ்ந்தனர்; உள் வெள்கினர்;
வெகுண்டார். |
இருவரும் எழுந்து
நின்றவாறு போரிட்டு, தான்தான் மற்றவன்
இரண்டு கொம்புகளையும் பற்றிக் கொண்ட கைகளை நெகிழ விடாமல்,
அழுத்தமான தன்தன் கால்களைக் கொண்டு மற்றவன் மார்பிலே உதைக்க,
நெருங்கிய திருகு கொம்புகள் இருவர் கையோடும் பெயர்ந்து விழவே,
இருவரும் தரையில் விழுந்தனர்; உள்ளம் வெட்கினர்; அதனோடு சினமும்
கொண்டனர்.
சத்தனாசு
தன் பெருமை பேசல்
- விளம், மா,
தேமா, - விளம், - மா, தேமா
| 54 |
நக்கன கண்ட
பேய்கள் நக்கன வென்று வேந்தன்
மிக்கன சினந்து நோக்கி விளைந்தபோர் கையா னீக்கித்
தொக்கன பிணங்க ளஞ்சத் தொகையில விடிபோ லார்த்துத்
தக்கன வினைகள் கக்கச் சத்தனா சுரைகொண் டானால். |
| |
நக்கன கண்ட
பேய்கள். நக்கன என்று, வேந்தன்,
மிக்கன சினந்து நோக்கி, விளைத்த போர் கையால் நீக்கி,
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை இல இடி போல் ஆர்த்து
தக்கன வினைகள் கக்க, சத்தனாசு, உரை கொண்டான் ஆல்: |
|