பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்506

கூறுவோர் நாணமே கொள்பவர் ஆவர்; கதைகளிற் கூறிய அத் தேவர்கள்
பூண்ட தகுதி யுடையோரைப் பிறர் கொல்ல முற்படுபவரும் ஆவர்.

     'ஆவர்' என்ற சொல் வருவித்து முடிக்க. "ஆகையால், மனிதரிடத்துப்
பொறுக்கப் படாத குற்றங்களை உடையவரைத் தேவராக வணங்கச் செய்த
அருமையைக் காட்டுவது கருத்து" என்பது பழைய வுரை அடிக்குறிப்பு

                     58
புனைநிலா வணியில் லாளைப் போக்கலா லரற்றி மாழ்கல்
மனைவியா லடிபட் டோடல் மனைவியைத் தலையிற் றாங்க
லனையள்கால் பினிற்றுச் செந்நீ ரணியென நுதலிற் பூச
லினையெலாம் பூசித் தேவர்க் கியலுமோர் விளையாட்                                        டென்றேன்.
 
"புனைநிலா அணி இல்லாளைப் போக்கலால் அரற்றி மாழ்கல்
மனைவியால் அடி பட்டு ஓடல், மனைவியைத் தலையில் தாங்கல்,
அனையள் கால் பினிற்றுச் செந்நீர் அணி என நுதலில் பூசல்
இனை எலாம், பூசி, தேவர்க்கு இயலும் ஓர் விளையாட்டு என்றேன்.

     "அழகிய நிலவை அணிந்த மனைவியை இழந்தமையால் அழுது
மயங்குதல், தன் மனைவி கையால் அடிபட்டு ஓடுதல், மனைவியைத் தன்
தலையில் சுமத்தல், அவள் வெளி விடும் சூதகச் செந்நீரை ஓர் அணியாகத்
தன் நெற்றியில் பூசிக் கொள்ளுதல் - இவை போன்ற எல்லாம், பூசி
மறைத்து, தேவர்களுக்குப் பொருந்திய திருவிளையாடலென்று
அந்நாட்டவருக்குச் சொல்லி வைத்தேன்.

                    59
பொதுமுறை மகளிர் நாடல் புறமனை விழைதல் தண்ண
மதுமுறை மலருட் புக்கு மதுசகன் கணைவெப் பாற்றல்
விதுமுறை குனிவிற் கஞ்சி வென்றர வொளித்து நாண
லிதுமுறை மறையி னாட்டி யிறையவர்க் கிலீலை யென்றேன்.