|
"பொது முறை மகளிர்
நாடல், புற மனை விழைதல், தண்ண
மதுமுறை மலருள் புக்கு, மதுசகன் கணை வெப்பு ஆற்றல்,
விதுமுறை குனி விற்கு அஞ்சி வென்தர ஒளித்த நாணல்-
இதுமுறை மறையின் நாட்டி, இறையவர்க்கு இலீலை என்றேன். |
"பொது உரிமை
முறையுள்ள விலைமகளிரை நாடிச் செல்லுதல்,
புறத்தான் மனைவியை விரும்புதல், குளிர்ந்த தேனை முறையாகக்
கொண்டுள்ள மலருக்குள் புகுந்து, மன்மதனின் அம்பால் ஏற்பட்ட காம
வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதல், பிறை போன்று வளைந்த பகைவர்
வில்லுக்கு அஞ்சி முதுகு காட்டி ஒளித்துப் போய்ப் பின் அதற்கு நாணுதல்
- இது போன்ற முறைகளை யெல்லாம் வேதமாக நாட்டி, இவை
தேவர்களுக்கு விளையாட்டென்று மக்களுக்குக் காட்டினேன்.
| 60 |
குய்யமே
விழியாய்த் தாங்கல் குய்யத்து ளொளித்தல் கோசம்
வையவே யூழ்த்து வீழ்தல் மருவிய குறியி ரண்டுங்
கையமே யாகப் பூணல் காட்டரும் பலவு நாட்டி
யையமே யின்றித் தேவர்க் கானதோர் முறைமை யென்றேன். |
| |
"குய்யமே விழியாய்த்
தாங்கல், குய்யத்துள் ஒளித்தல், கோசம்
வையவே ஊழ்த்து வீழ்தல், மருவிய குறி இரண்டும்
கையமே ஆகப் பூணல், காட்ட அரும் பலவும் நாட்டி,
ஐயமே இன்றி, தேவர்க்கு ஆனது ஓர் முறைமை என்றேன். |
"பெண்குறியைக்
கண்களாக உடலில் தாங்குதல், பெண்குறிக்குள்
சென்று ஒளிந்து கொள்ளுதல், சாபமிடுதலால் ஆண்குறி அழுகி விழுதல்,
ஆண் பெண்ணிடமாய்ப் பொருந்திய குறி இரண்டையும் அணியாகப்
பூணுதல், இன்னும் சொல்லிக் காட்டுதற்கு அரிய பலவும்
அந்நாட்டவரிடையே நாட்டி, ஐயத்திற்கு இடமின்றி, இவையெல்லாம்
தேவர்களுக்குப் பொருந்துவதான ஒரு முறைமையென்று மக்களுக்கு
காட்டினேன்.
|