|
| 61 |
ஈமஞ்சேர்
மாலை யாக விழிபடக் கழுதை சேர்ந்தோன்
காமஞ்சேர் சங்கத் தொன்றிற் கடந்தவா யிரமாண் டுள்ளோ
னேமஞ்சேர் மனையா லெண்ணீ ராயிர ரிமிழிற் கொண்டோன்
சேமஞ்சேர் வலியி லோங்குஞ் சிறப்பெழுந் தேவ ரென்றேன். |
| |
"ஈமம் சேர்
மாலை ஆக இழி படக் கழுதை சேர்ந்தோன்,
காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன்,
ஏமம் சேர் மனையார் எண் ஈர் ஆயிரர் இமிழின் கொண்டோன்,
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன். |
"சுடுகாட்டில்
பொருந்திய மாலை போல் தனக்கு இழிவு நேருமாறு
கழுதையோடு கூடியவன், காமம் தழுவிய சேர்க்கை ஒன்றில் கடக்க விட்ட
ஆயிரம் ஆண்டுகளுக்கு உரியவன், இன்பம் பொருந்திய மனைவியர்
பதினாறாயிரம் பேரை இன்பத்தோடு கொண்டவன் - இவர்களையெல்லாம்,
பாதுகாப்புள்ள வலிமையில் ஓங்கும் சிறப்போடும் எழுந்து நிற்கும்
தேவர்களென்று காட்டி வணங்குவித்தேன்.
| 62 |
அன்னையே
மனைவி யாக அமைந்தவன் றேவ னென்றேன்
பின்னையே சுதையைப் புல்லப் பெட்டவன் றேவ னென்றேன்
றன்னையே யழித்துக் காமந் தணித்தவன் றேவ னென்றே
னென்னையே யறைவே னென்ற யாவுமே வழங்கச் செய்தேன். |
| |
"அன்னையே மனைவியாக
அமைந்தவன் தேவன் என்றேன்.
பின்னையே, சுதையைப் புல்லப் பெட்டவன் தேவன் என்றேன்.
தன்னையே அழித்து, காமம் தணித்தவன் தேவன் என்றேன்.
'என்னையே அறைவேன்!' என்ற யாவுமே வழங்கச் செய்தேன். |
"தன் தாயையே
மனைவியாகக் கொண்டவனைத் தேவன் என்றேன்.
பின்னும் தன் மகளைப் புணர விரும்பியவனைத் தேவன் என்றேன்.
தன்னையே அழித்து, அதன் மூலம் தன் காமம் தணியப் பெற்றவனைத்
தேவன் என்றேன். 'இவற்றையெல்லாம் நாண மில்லாமல் எவ்வாறு
எடுத்துரைப்பேன்!' என்று தயங்கக் கூடிய யாவற்றையும் அம்மக்களிடையே
வழங்கச் செய்தேன்.
|