|
| 63 |
உடல்விளை
யீன மாக்க ளுணர்கவு நாணுங் காதை
மிடல்விளை களிப்பிற் செய்தோர் விண்ணின்வாழ் தேவ
ரென்னக்
கடல்விளை யரவத் தன்னார் களிவிழா வணிகொண் டாட
வடல்விளை வஞ்சத் தங்க ணருமுறை நாட்டி னேனே. |
| |
"உடல் விளை
ஈன மாக்கள் உணர்கவும் நாணும் காதை
மிடல் விளை களிப்பின் செய்தோர் விண்ணின் வாழ் தேவர் என்ன,
கடல் விளை அரவத்து அன்னார் களி விழா அணி கொண்டாட,
அடல் விளை வஞ்சத்து அங்கண் அரு முறை நாட்டினேனே. |
"உடலால் விளையும்
இழி செயலெல்லாம் கொண்ட மக்களும்
உணர்வதற்கும் நாணக்கூடிய கதைகளிற் கண்ட செயல்களைத் தம்
வலிமையால் விளையும் களிப்போடு செய்தவர்களையெல்லாம்
வானுலகில் வாழும் தேவர்களென்று காட்டி, கடலில் தோன்றுவது
போன்ற ஆரவாரத்தோடு அம்மக்கள் களிப்பூட்டும் விழாக்களை
சிறப்பாகக் கொண்டாடும்படி, என் வலிமையோடு கூடிய வஞ்சகத்
திட்டத்தால் அங்கே அரிய முறையில் நிலைநாட்டியுள்ளேன்.
'கதை' கதையிற்
கண்ட செயல்களுக்கு ஆகு பெயர்.
| 64 |
சேண்முகம்
புதைத்த கோயிற் றீட்டிய தேவர் காதை
வாண்முகம் புதைத்த நீண்கண் மடந்தையர் கண்ட காலை
நாண்முகம் புதைத்த பின்றை நாணமற் றதைச்செய்
தோரைப்
பூண்முகம் புதைத்த மையற் பொலிவொடு வணங்கச்
செய்தேன். |
| |
"சேண் முகம்
புதைத்த கோயில் தீட்டிய தேவர் காதை
வாள்முகம் புதைத்த நீண் கண் மடந்தையர், கண்ட காலை,
நாண் முகம் புதைத்த பின்றை, நாணம் அற்று அதைச்
செய்தோரை,
பூண் முகம் புதைத்த மையல், பொலிவொடு வணங்கச் செய்தேன். |
|