பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்510

     "வாளை முகத்தில் புதைத்து வைத்தது போன்ற நீண்ட கண்களை
உடைய மகளிர், வானத்தின் முகத்தை மூடி மறைத்த உயரமான அக்
கோயில்களில் ஓவியமாகத் தீட்டிய தேவர் கதைகளைக் கண்டபோது,
முதலில் நாணத்தால் தம் முகங்களைக் கைகளால மூடிக் கொண்ட பின்னர்,
அவை அணிந்திருந்த அணிகலன்கள் தம் முகத்தை அங்குப் பதிய வைத்த
மயக்கத்தால், நாணமில்லாமல் அவ் ஓவியத்தில் குறித்த செயலைச் செய்த
அத் தேவரைப் பொலிவோடு வணங்குமாறு செய்துள்ளேன்.


                     65
என்வலத் தொழிலி தைய விவனும் வந் தமைத்த யாவுந்
தன்வலத் தொழிலென் றோதத் தாவரும் வலியோ னென்றும்
புன்வலத் தொழிலோ னென்றும் பொருத்தலிற் றோன்றுந்
                                        தோன்றி
மன்வலத் தொழிலோன் உன்னால் வரிசைபெற் றுய்வா
                                        னென்றான்.
 
"என் வலத் தொழில் இது, ஜய! இவனும் வந்து, அமைத்த யாவும்,
தன் வலத் தொழில் என்று, ஓத, தாவ அரும் வலியோன் என்றும்
புன் வலத் தொழிலோன் என்றும், பொருத்தலின், தோன்றும்; தோன்றி,
மன் வலத் தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான்" என்றான்.

     "எனது வல்லமைச் செயல் இது, ஐயா! இவனும் முன் வந்து,
தன் வல்லமைச் செயலென்று அமைத்த யாவையும் எடுத்துக் கூறவே,
அவற்றைப் பொருத்திப் பார்க்கையில், கடத்தற்கரிய வல்லமை
கொண்டவன் எம்முள் யாரென்றும், அற்ப வல்லமைச் செயல்
படைத்தோன் யாரென்றும் புலப்படும்; அவ்வாறு புலப்படவே, நிலைபெற்ற
வல்லமைச் செயல் படைத்தோன் உன்னால் வரிசை பெற்று உயர்வான்"
என்றான்.

     'தாவ' + 'அரும்' - ' தாவவரும்' எனற்பாலது, 'தாவரும்' என
நின்றது தொகுத்தல் விகாரம்.

                     திரங்கரனை அடக்கல்

                    66
கூடுடை மாக்கள் காமங் குணமென நாடி நாடுங்
கேடுடைக் காம மூடக் கெழுமிய தேவர் காமப்
பீடுடை யாரென் றுன்னல் பெரும்புகழ் பெற்ற வாண்மை
யீடுடைத் தொழிலென் பாயோ வெனத்திரங் கரன்முற்                                     பாய்ந்தான்.