பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்512

                     68
இற்றைநீ செய்த போதே யெமதுபே யினத்துக் கோனான்
மற்றைநீ தலைவனாகி வாழிசத் தனாசே வஞ்சத்
தொற்றைநீ ருடைய நீயென் றொற்றைக்கொம்
                                   பளித்தே னென்ன
வற்றைநீ டலையி னாப்ப ணமைத்துநாட் டினன்பேய் வேந்தே.
 
"இற்றை நீ செய்த போதே, எமது பேய் இனத்துக் கோன் நான்,
மற்றை நீ தலைவன் ஆகி வாழி, சத்தனாசே! வஞ்சத்து
ஒற்றை நீர் உடைய நீ என்று, ஒற்றைக் கொம்பு அளித்தேன்" என்ன,
அற்றை நீள் தலையின் நாப்பண் அமைத்து நாட்டினன், பேய் வேந்தே.

     பேய்க்கரசன், சத்தனாசை நோக்கி, "இதனையெல்லாம் நீ
செய்துள்ளபடியால், சத்தனாசே, நமது பேயினத்துக்கு நான் அரசனாய்
இருக்க, மற்றப்படி நீயே தலைவனாகி வாழ்வாயாக. வஞ்சகத்தில் நீ
நிகரில்லாத ஒற்றைத் தன்மை உடையவனென்று நான் உன்னை மதித்து,
உனக்கு ஒற்றைக் கொம்பு தந்தேன்" என்று கூறி, அதனை அவனது நீண்ட
தலையின் நடுவில் அமைத்து நாட்டினான்,

                 சத்தனாசு காரணங் கேட்டல்

                    69
எப்புறத் தனைத்து முன்ன ரியன்றதன் கோலந் நாட்டிற்
கப்புறத் தியலா தென்று மதற்குளத் துணர்ந்த தன்மை
செப்புறத் தானே கண்ட சிறப்பென வரசன் கேட்பத்
தப்புறத் தனித்தீ வஞ்சச் சத்தனா சறைத லுற்றான்.
 
எப் புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல்,
                                       அந் நாட்டிற்கு
அப் புறத்து இயலாது என்னும் அதற்கு, உளத்து
                                       உணர்ந்த தன்மை
செப்பு உற, தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப,
தப்பு உறத் தனித் தீ வஞ்சச் சத்தனாசு அறைதல் உற்றான்.

     எப்பக்கமும் அனைத்து உலகங்களிலும் முன்னர் நடந்து வந்த தன்
ஆட்சி, அந்த நரக நாட்டிற்கு அப்புறம் இனி நடவாது என்னும்