|
அக்கருத்திற்கு, தன்
உள்ளத்தில் அவன் உணர்ந்த தன்மை சொல்லால்
வெளிப்படுமாறு, தானே கண்ட சிறப்பான காரியத்தைச் சொல்லுமாறு
பேய்க்கரசன் வினவவே, பாவம் விளைவிப்பதில் ஒப்பற்ற தீய வஞ்சகம்
படைத்த சத்தனாசு பின் வருமாறு சொல்லலானான்;
மூன்றாம்
அடியில், 'என' என்ற சொல், 'என்' என்ற பகுதிக்குச்
'சொல்' என்ற பொருள் அமைத்து, 'என' என்பதனைச் 'சொல்ல' என்று
கொண்டு, 'சிறப்பைச் சொல்ல அரசன் கேட்ப' என்ற பொருள் தந்து
நின்றது,
- - காய்,
- - காய், - - காய், - - காய்
| 70 |
வான்விளைவாழ்
விழந்திங்கண் மருண்டெரிநாம் விழுங்காலுந்
தேன்விளைகான் முதன்மகனே தீதுறநாஞ் செயுங்காலு
மூன்விளையாக் கையிலும்மை யொழிப்பலென வுரைத்திறைவன்
றான்விளையா குலக்காலந் தானிதெனத் தோன்றுமையா. |
| |
"வான் விளை
வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம்
விழும் காலும்,
தேன் விளை கான் முதல் மகனே தீது உற நாம் செயும் காலும்,
'ஊன் வினை யாக்கையில் உம்மை ஒழிப்பல்' என
உரைத்த இறைவன்
தான் விளை ஆகுலக் காலம் தான் இது எனத் தோன்றும், ஐயா! |
"ஐயா, வானுலகில்
உண்டான வாழ்வை நாம் இழந்து மருண்டு
இந்நரகத்து நெருப்பில் விழும்போதும், தேனை விளைவிக்கும் சோலையில்
முதல் மனிதனாகிய ஆதாம் பாவத்தில் விழுமாறு நாம் செய்யும் போதும்,
'ஊனோடு கூடிய உடலைப் பூண்டு வந்து உங்களை ஒழிப்பேன்' என்று
கூறிய இறைவன் தான் நமக்கு விளைவிக்கும் துன்பக் காலம்தான் இது
என எனக்குத் தோன்றும்.
உரைத்த
+ இறைவன் - 'உரைத்தவிறைவன்' எனற்பாலது,
'உரைத்திறைவன்' எனத் தொகுத்தல் விகாரம் ஆயிற்று.
|