|
| 71 |
ஈரெழுவெண்
டிங்களுமுன் னீரிருதண் டங்களுமுன்
போரெழுவெம் பகைசெய்த பொருந்தலரைக் காணாநாங்
காரெழுவெங் கதத்திடிபோற் கடிதிங்கண் வீழ்ந்தடைந்த
சூரெழுவெங் காரணமுந் தோன்றிலதுட் குற்றனமே. |
| |
ஈர் எழு வெண்
திங்களும் முன், ஈர் இரு தண் திங்களும் முன்,
போர் எழு வெம் பகை செய்த பொருந்தலரைக் காணா, நாம்
கார் எழு வெங் கதத்து இடிபோல் கடிது இங்கண்
வீழ்ந்து அடைந்த
சூர் எழு வெங் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே. |
"பதினான்கு மாதங்களுக்கு
முன்னும், நான்கு மாதங்களுக்கு முன்னும்,
போருக்கு எழுந்தது போன்ற கொடிய பகையைச் செய்த பகைவரைக்
காணவும் இயலாமல், கருமேகத்தில் எழும் கடுஞ்சினமுள்ள இடி விழுந்தது
போல் நாம் விரைவில் இந்நரகத்தில் பதறி விழுந்து அடைந்த துன்பம்
எழுவதற்கான கொடிய காரணமும் தோன்றாமல் அச்சம் அடைந்தோம்.
வெண் திங்கள்,
தண் திங்கள் என அடைமொழி கொண்ட திங்களின்
பெயர் அத்திங்களின் அடிப்படையில் கணிக்கப் படும் மாதத்தைக் குறித்து
நின்றது. 'பதினாலு மாத முன்னே திருவவதாரமும், நாலு மாத முன்னே
திருக்குமாரன் பிறந்ததுமாகி, முன் சொன்னபடி, அவ்விரு காலத்தும் பூவுலகு
இருந்த பேயெலாம் நரகில் விழுந்தன என்க" என்பது பழையவுரை அடிக்
குறிப்பு.
| 72 |
மீண்டெழுந்து
நான்மதிமுன் மேதினியிற் போயங்கண்
மாண்டெழுந்து வந்தநவ மதித்தாய்ந்தே யன்றிரவி
யீண்டெழுந்து மும்மடங்கா யிலங்கிநிசி யிருளஃகி
யாண்டெழுந்து வையமெலா மழகுறிக்கேழ்த்
ததுகண்டோம். |
|