|
நாய் முகத்து
நின்றன பேய் நவின்றவைகேட்டு அகீதத்தன்,
வீய் முகத்து வியப்பு எய்தி, "விளம்பியதே திடம்" என்றான்.
தீய் முகத்து நகை காட்டி, சீதாய்வு, மறுத்து உரைக்கும்:
"நோய் முகத்து, விலங்கு உறையுள் நுழைந்து, இறையோன்,
பிறப்பானோ? |
நாய் முகத்தோடு
நின்ற சத்தனாசு என்னும் பேய் கூறியவற்றை
அகீதத்தன் என்னும் பேய் கேட்டு, தன் புலி முகத்தில் வியப்புக் காட்டி,
"சத்தனாசு சொல்லியதே உறுதி" என்றான். சீதாய்வு என்னும் பேய் எரிந்த
முகத்தோடு நகைத்து, அகீதத்தன் கூறியதை மறுத்துப் பின்வருமாறு
கூறுவான்: "ஆண்டவன், துன்பத்தினிடையே, விலங்கு வாழுமிடத்துள்
நுழைந்து பிறப்பானோ?
'வீ' என்ற
புலிப் பெயர், எதுகைப் பொருட்டு, 'வீய்' என நின்றது.
| 76 |
மிடிகொண்டா
னுளைந்தழப்பல் வினைகொண்டா
னிந்தையொடும்
படிகொண்டான் பகைகொண்டான் பகர்வரிய வஞர்கொண்ட
குடிகொண்டான் புறநாட்டிற் கூரிடுக்கண் கொண்டானே
முடிகொண்டாய் மூவுலகோர் மூவிரலாற் கொண்டானோ. |
| |
"மிடி கொண்டான்;
உளைந்து அழப் பல் வினை கொண்டான்; நிந்தையொடும்
படி கொண்டான்; பகை கொண்டான்; பகர்வு அரிய அஞர் கொண்ட
குடி கொண்டான்; புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே;
முடி கொண்டு ஆய், மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ?" |
"பெத்திலேமில்
பிறந்த அம் மகன் வறுமையை உரிமையாகக்
கொண்டான்; நொந்து அழத் தக்க பல செயல்களுக்கு உட்பட்டான்;
நிந்தையோடு இவ்வுலகைப் பிறப்பிடமாகக் கொண்டான்; பிறர் தம்
பகைக்கு ஆளானான்; சொல்லுதற்கு அரிய துன்பம் நிறைந்த
குடும்பத்தைத் தனக்கென்று கொண்டான்; அயல் நாட்டில் மிகுந்த
தொல்லைகள் அடைந்தானே; இத்தகையவன், முடி அணிந்து ஆளும்
தன்மையாய், மூன்று உலகங்களையும் தன் மூன்று விரல்களால் தாங்கிக்
கொண்டிருக்கும் ஆண்டவன் ஆவானோ?"
|