பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்518

     "மூவிரல்களாவன: திறல், நீதி, ஞானம்" என்று பழைய உரை கூறும்.

                     77
என்றானொத் திசைத்திசைப்ப வெரிப்பலபேய்
                               பேய்க்கரசன்
கன்றாநற் கன்னிவயிற் கடவுளுல குதிப்பனெனக்
குன்றாமெய்ச் சுருதியதாய்க் கொழுநனுள மரியென்பா
ளன்றாவற் கீன்றமக னாண்டகையோ வன்றென்றான்.
 
என்றான் ஒத்து, இசைத்து இசைப்ப எரிப் பல பேய்,
                                   பேய்க்கு அரசன்,
"கன்றா நல் கன்னி வயின் கடவுள் உலக உதிப்பன் எனக்
குன்றாமெய்ச் சுருதியது ஆய், கொழுநன் உள மரி என்பாள்
அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ? அன்று" என்றான்.

     அவ்வாறு கூறிய சீதாய்வைப் போன்று, எரி நரகப் பேய்கள்
பலவும் இசைவு காட்டிப் பேசவும், பேய்க்கரசன், "பழுதுபடாத நல்ல
கன்னியினிடமாகக் கடவுள் இவ்வுலகத்தில் வந்து உதிப்பானென்று
குறையற்ற நல்ல வேதவாக்கு இருக்கவும், அந்த நாளில் கணவனை
உடைய மரியாள் ஆவலோடு பெற்ற மகன் ஆண்டவன் ஆவாறோ?
அன்று" என்றான்.

                        78
கலைபுறங்கண் டொளிர்ஞானங் கடந்திறையோன் கன்னித்தாய்க்
குலைப்புறங்கண் டலருயர்த்தோன் கணவனென வீந்தனகாற்
கொலைபுறங்கண் டிகற்குணுங்கிற் கிவையொளிப்பக்
                                         குறித்தனனே
நிலைபுறங்கண் டாண்டகைமுன் நினைத்தபய னின்றுளதால்.