|
அறிவுத்
தெளிவற்றவர் ஓர் அரிய பொளை இருட்டறையினுள்
தேடிக்காண முற்படுதல் போல, நடைமுறைக்கு இயலாத ஒர்
ஆலோசனையில் பேய்க் கூட்டம் ஈடுபட்டு நிலை காணாமலும், மாற்ற
முடியாத ஓர் அச்சக் கடலை நீந்த அறியாமலும் மயங்கி அலையவே,
பேய்க்கரசன், தாங்க முடியாத ஒரு துயரம் தன்னை விட்டு நீங்காமையால்
புகைந்து, பின் வருமாறு சொல்லலானான்
| 80 |
| |
| - மா,
கூவிளம், - விளம், - விளம், - மா |
| |
ஐய மீட்பதன்
பொருட்டகத் தலைநினை வகன்மின்
வைய மீட்பதன் பொருட்டெமால் மலிந்தன வஞ்சப்
பொய்யை மீட்பதன் பொருட்டிறை பிறந்தில னின்ன
மெய்யை மீட்பதன் பொருட்டொரு விளக்கமு மிலதால். |
| |
"ஐயம் மீட்பதன்
பொருட்டு அகத்து அலை நினைவு
அகல்மின்.
வையம் மீட்பதன் பொருட்டு எமால் மலிந்தன வஞ்சப்
பொய்யை மீட்பதன் பொருட்டு, இறை பிறந்திலன். இன்ன
மெய்யை மீட்பதன் பொருட்டு ஒரு விளக்கமும் இலது ஆல். |
"ஆண்டவன் பிறந்துள்ளானோ
இல்லையோ என்ற ஐயத்தினின்று
விடுபடும் பொருட்டு மனத்தை அலைக்கும் எண்ணங்களை
விட்டொழியுங்கள். இவ்வுலகத்தை மீட்கும் பொருட்டோ, நம்மால்
வளர்ந்துள்ள வஞ்சகப் பொய்யை ஒழிக்கும் பொருட்டோ, ஆண்டவன்
மனிதனாகப் பிறந்துள்ளான் அல்லன். இந்த உண்மையை மீட்டுத்
தரும்படியாக உங்கள் பேச்சில் ஒரு விளக்கமும் இல்லை.
'ஆல்'
அசைநிலை. இறுதி அடிக்கு, "இதே மெய்; இதை மறுக்கும்படி
ஞாயம் ஒன்றுமில்லை" என்ற பழையவுரை பொருந்துவதன்று. 'மீட்பதன்
பொருட்டு' - மறுத்துச் சொல்வதற்கு எனலாம்.
| 81 |
திடங்கொ
டார்புலன் றெளிந்தநா மறிகிலா மனுவாய்த்
தடங்கொ டாண்டகை தரணியி லுதிப்பனோ விதுவே
மடங்கொ டாயின வழுதென வந்தநோய் மறுப்ப
விடங்கொ டாகுவ தியாதென வியம்புதீ ரென்றான். |
|