|
| 83 |
தூம நாடிய
வுருவுமொண் கோயிலுந் துகளாய்ச்
சேம நாடெனச் செழுமெசித் திழந்தன சிதைவால்
வீம நாடிய வெருக்கொடு மயங்குவ தென்னோ
காம நாடிய காலரி தெமக்குள் துண்டோ. |
| |
"தூமம் நாடிய
உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய்,
சேம நாடு என் அச் செழும் எசித்து இழந்தன சிதைவால்,
வீமம் நாடிய வெருக் கொடு மயங்குவது என்னோ?
காமம் நாடிய கால், அரிது எமக்கு உளது உண்டோ? |
"மணப் புகையை
நாடி நின்ற நமது உருவச் சிலைகளும் ஒளி
பொருந்திய கோவில்களும் தகர்ந்து தூளாகவே, நமக்குப் பாதுகாப்புள்ள
நாடு எனக் கருதிய செழுமையான எசித்து நாட்டை இழந்துபோன
சிதைவின் காரணமாக, துன்பம் பொருந்திய அச்சம் அடைந்து மயங்குவது
ஏனோ? காமப் பாவத்தைத் துணையாக நாடினால், நமக்கு அரிதென
உள்ளது ஏதேனும் உண்டோ?
| 84 |
சிலைவல்
லார்களுஞ் சிறப்பெழு நெடும்புகழ் திளைநூற்
கலைவல் லார்களுங் கடிநிதித் திருக்கொடு பெருங்கோ
னிலைவல் லார்களு நிறுவிய மற்றவல் லாரு
முலைவல் லார்களின் முயலினான் முரிவிலா ருண்டோ. |
| |
"சிலை வல்லார்களும்,
சிறப்பு எழு நெடும் புகழ் திளை நூல்
கலை வல்லார்களும், கடி நிதித் திருக் கொடு பெருங் கோல்
நிலை வல்லார்களும், நிறுவிய மற்ற வல்லாரும்
முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ? |
"வில்லில் வல்ல
வீரர்களும், சிறப்புடன் எழுந்த நெடும் புகழில்
திளைக்கும் நூல்களைக் கற்ற கலையில் வல்லவர்களும், மிக்க நிதி
என்னும் செல்வத்தைக் கொண்டு பெருமைக்குரிய செங்கோல் செலுத்தும்
நிலையில் வல்ல மன்னர்களும், நிறுவப்பட்ட மற்ற வகைகளில்
வல்லவர்களுமாகிய யாவருள்ளும், முலையைக் காட்டி மயக்குதலில் வல்ல
மகளிர் தம் முயற்சியால் கெடாதவர் உண்டோ?
|