|
| 89 |
தாங்க ரும்பொறை
தறிமடுத் தெடுத்தென வஞ்சத்
தோங்க ருந்தொழி லுதவிகொண் டொளித்தவே லெறிந்த
நீங்க ரும்பகை நிறையுயி ருண்டென நீயுந்
தீங்க ரும்படை யொளித்தியேற் செயிர்புக வெல்வாய். |
| |
"தாங்க அரும்
பொறை தறி மடுத்து எடுத்து என, வஞ்சத்து
ஓங்கு அருந் தொழில் உதவி கொண்டு, ஒளித்த வேல், எறிந்த
நீங்க அரும் பகை நிறை உயிர் உண்டு என, தீயும்
தீங்கு அரும் படை ஒளித்தியேல், செயிர் புக வெல்வாய். |
தாங்குதற்கு அரிய
பாரத்தை உள்ளே ஒரு தறியை நுழைத்துத்
தூக்கிய தன்மை போல், வஞ்சகத்தால் உயர்ந்த அரிய செயல் முறைகளை
உதவியாகக் கொண்டு, ஒளித்து வைத்திருந்த வேல், எறியப்பட்ட
விலக்குதற்கு அரிய பகைவனின் நிறைந்த உயிரை உண்ட தன்மைபோல்,
பாவமென்னும் அரிய கருவியின் தீங்கை நீ மறைத்துக் காட்டுவாயெனில்,
பாவம் புகுமாறு வெற்றி கொள்வாய்.
'தாங்கவரும்,
நீங்கவரும்' என்பன, 'தாங்கரும், நீங்கரும்' என வந்த
தொகுத்தல் விகாரங்கள்.
| 90 |
கொல்வ
தற்கருங் குணத்துளத் திறையவன் புதைத்த
வெல்வ தற்கரு நாணம தொன்றினை வென்றா
லொல்வ தற்கரு முளமுனக் கமைந்துபா முகத்திற்
சொல்வ தற்கருந் தொடையெனத் தொடர்வன துகளே. |
| |
"கொல்வதற்கு
அருங் குணத்து உளத்து இறைவன் புதைத்த
வெல்வதற்கு அரு நாணம் அது ஒன்றினை வென்றால்,
ஒல்வதற்கு அரும் உளம் உனக்கு அமைந்து, பாமுகத்தில்
சொல்வதற்கு அருந் தொடை என, தொடர்வன துகளே. |
"அழிப்பதற்கு
அரிய தன்மையாய் மனிதர் உள்ளத்தில் ஆண்டவன்
புதைத்து வைத்துள்ள, வெல்வதற்கு அரிய நாணம் என்னும் ஒன்றை
மட்டும் நீ வென்று ஒழித்து விடுவாயெனின், பொருந்துவதற்கு அரிய
அம்மனிதர் உள்ளமும் உனக்கு அமைந்து செல்லவே, செய்யுளினிடத்துச்
சொல்வதற்கரிய தொடை உறுப்புகள் தொடர்ந்து வருவதுபோல், பாவங்கள்
அம்மனிதரிடத்துத் தொடர்வன ஆகும்.
|