பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்526

                91
நங்கை நம்பியு நாடிய வன்பென நாட்டிச்
சங்கை யம்பல சாதிநன் முறையெனப் புகுத்தி
யங்கை யங்கனை பழகினீ யகலினு மரிதுன்
வங்கை யுன்புற வன்னிமுன் வையென வழல்வாள்.
 
"நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி,
சங்கையம் பல சாதி நல் முறை எனப் புகுத்தி,
அம் கை அங்கனை பழகின், நீ அகலினும், அரிது உன்
வங்கை இன்பு உற, வன்னி முன்வை என அழல்வாள்.

     "ஒரு பெண்மகளும் ஆண்மகனும் இயற்கையாக ஒருவரையொருவர்
நாடிய அன்பு என்ற காமத்தை நிலைநாட்டி, சாதிக்குரிய நல்ல முறைகள்
எனப் பல விளையாட்டுக்களைப் புகுத்தி, ஒரு பெண்ணின் அழகிய கை
ஓர் ஆடவனைத் தொட்டுப் பழக வாய்ப்பு ஏற்படுத்துவாயெனில்,
அதன்மேல் நீ விலகிச் சென்றாலும், உன் பகைவனும் இது அரிய
செயலென்று இன்புறுமாறு, அவள் நெருப்பின் முன் வைக்கோல் போலக்
காமத்தீயில் வேகுவாள்.

     முதலடிக்கு, "தங்கைச்சியும் அண்ணனும் பற்றிய அன்பு என்னும்
பெயரை நாட்டி," என்று பழையவுரை உறும்.

                   92
மால்க லந்தவா வளரவென் பணியினாற் கவிஞர்
நூல்க லந்தவாய் நுனித்தே னெனத்தகுங் காமஞ்
சால்க வந்தபாச் சாற்றவுங் கேட்பவுஞ் செய்வாய்
பால்க லந்தகாற் பருகிய நஞ்சுமீட் பரிதே.
 
"மால் கலந்து அவா வளர, என் பணியினால் கவிஞர்
நூல் கலந்த வாய், நுனித்த தேன் எனத்தகும் காமம்
சால் கலந்த பாச் சாற்றவும் கேட்பவும் செய்வாய்;
பால் கலந்த கால், பருகிய நஞ்சு மீட்பு அரிதே.