"அஞ்சினார்
எனில், 'அமைதிர் ஓர் முறை' என்பாய். வஞ்சத்து
எஞ்சு இலாய் எனில், இணங்குவர். இணங்கிய பின்றை,
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து, நிற்பவரோ,
மஞ்சில் வாழ் உயர் வரைபெயர்ந்து இழிந்த கல் போன்றே? |
சிலர் பாவத்திற்கு
அஞ்சினாரெனில், 'ஒரு தடவை மட்டும் இதற்கு
இணங்குங்கள்' என்று கூறுவாய். அவ்வாறு வஞ்சகத்தில்
தளராதிருப்பாயானால், அவரும் இணங்குவர். அவ்வாறு ஒரு தடவை
இணங்கிய பின், இப்பாவம் நஞ்சிலர் நன்மை என்று உணர்வர். அவ்வாறு
உணர்ந்த பின், மேகத்தோடு கூடி வாழும் உயர்ந்த மலையினின்று
பெயர்ந்து விழுந்த கல் போன்று, மேலும் மேலும் பாவத்தில் உருண்டு
விழாமல் நிற்பரோ?
'ஒருவர்' என்பது
'ஒருவரும்' என வந்தது, செய்யுள் நோக்கி வந்தது;
உம் சாரியை. 'நஞ்சிலா நவை நறுமை' என்னும் தொடரை, 'நவை நஞ்சிலா
நறுமை' என மாற்றிக் கூட்டுக.
95 |
நம்பி யோடெழி
னன்மணத் துணைவியுந் தம்முள்
வெம்பி யோர்பகை விளைந்தகாற் காமமும் விளைவாந்
தும்பி சூழலர்த் தொற்கொழு கொம்பிழந் தடுத்த
கொம்பி லேறிய கொழுங்கொடி போல்வது காண்பாய். |
|
"நம்பியோடு
எழில் நல் மணத் துணைவியும் தம்முள்
வெம்பி, ஓர் பகை விளைந்த கால், காமமும் விளைவு ஆம்;
தும்பி சூழ் அலர்த்தொல் கொழுகொம்பு இழந்து, அடுத்த
கொம்பில் ஏறிய கொழுங் கொடி போல்வது காண்பாய். |
"ஆண்களிற் சிறந்த
ஒரு கணவனோடு அழகு வாய்ந்த நல்ல மணத்
துணைவியாகிய மனைவியும் தமக்குள் சினங்கொண்டு, அது ஒரு பகையாக
விளைந்த காலத்து, புறத்தே தேடும் காமப்பாவம் விளைவதாகும்;
எப்படியெனில், வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட தன் பழைய
கொழுகொம்பை இழந்தமையால், தன்னை அடுத்த மற்றொரு கொம்பில்
ஏறிப்படர்ந்த கொழுமையான கொடி போல் அவர்கள் அமைவதை நீ
அதன் பயனாகக் காண்பாய்.
|