96 |
பெண்ணங்
காணியும் பெருமையும் பேரொளிப் பிறப்புந்
திண்ணம் வாழ்க்கையுஞ் சிதையுமென் றிணங்கில ராகில்
வண்ணந் தீர்ந்துளம் வளைந்துதீ நசையுறச் செய்வாய்
தண்ணம் வேர்கெடிற் றருவெலாஞ் சாய்தலு மரிதோ. |
|
"பெண் அம் காணியும்,
பெருமையும், பேர் ஒளிப் பிறப்பும்,
திண் அம் வாழ்க்கையும் சிதையும் என்று இணங்கிலர் ஆகில்
வண்ணம் தீர்ந்து, உளம் வளைந்து, தீ நசை உறச் செய்வாய்;
தண் அம் வேர் கெடின், தரு எலாம் சாய்தலும் அரிதோ?" |
"பெண்ணுக்கு அழகு
தரும் உரிமைச் சொத்தாகிய கற்பும், தன்
பெருமையும், பெரும் புகழ் வாய்ந்த குடிப் பிறப்பும், உறுதிப்பாடுள்ள
அழகிய வாழ்க்கையும் இதனால் சிதையுமென்று காமப் பாவம் செய்ய
இணங்காரென்று கண்டால், குணம்கெட்டு, மனம் வளைந்து, தீய காம
ஆசை கொள்ளுமாறேனும் செய்ய முற்படுவாய்; குளிர்ச்சி தரும் அழகிய
வேர் அழியுமாயின், மரங்களெல்லாம் சாய்தலும் அரிதோ?'
வேர் கெட மரம்
சாய்வது போல், மனம் கெடவே செயலாலும்
பாவம் செய்து கெடுவரென்பது கருத்து.
97 |
மைமு கத்திவை
வகுத்தரும் பழிகொலை களவும்
பொய்மு கத்துறும் புரைபல விளையுமா றுணர்த்தி
நைமு கத்துயிர் நவையுறிக் கேடுற வரசன்
மொய்மு கத்தரு முரட்டொழி னெடிதுகாட் டினனால். |
|
மை முகத்து இவை
வருத்து, அரும் பழி கொலை களவும்,
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி,
நை முகத்து உயிர் நவை உறிக் கேடு உற, அரசன்,
மொய் முகத்து அரு முரண் தொழில் நெடிது
காட்டினன் ஆல். |
பேய்க்கரசன்,
இருளின் தன்மையாக இவற்றை வகைப்படுத்திச்
சொல்லி, அரிய பழியும் கொலையும் களவும் பொய்யின் அடிப்படையிலே
எழும் பாவம் பலவும் விளையும் வழியை உணர்த்தி, சோர்ந்தவிடத்து
உயிர்கள் பாவத்திற்கு ஆளாகிக் கேடயைம் படி, பாவம் விளைவிக்கும்
போரினிடத்து அரிய வலிமை வாய்ந்த தொழில் நுட்பங்களை நெடு
நேரம் சொல்லிக் காட்டினான்.
|