'ஆல்'
அசை நிலை, 'உறீஇ' என்ற அளபெடை, ஓசைப் பொருட்டு,
'உறி' என நின்றது.
கரோதரன்
யோசனை
- விளம், -
மா, - விளம், - மா, - விளம், - விளம், மா
98 |
கைமுகம்
புதைத்த நாகநீன் முகத்தான் கரோதர னக்கிவை
சொல்லும்
பொய்முகம் புதைத்த வஞ்சனைத் தொழிலாற் புரையுற
வுணர்ந்தவா யாவு
மெய்முகம் புதைத்த நூல்விளக் கெய்தி விளங்கினேற் பயனிலா
தன்றோ
மைமுகம் புதைத்த பொய்யறங் காட்டல் வடுப்புகும் பெருந்தட
மென்றான். |
|
கை முகம் புதைத்த
நாகநீல் முகத்தான் கரோதரன், நக்கு இவை
சொல்லும் :
"பொய் முகம் புதைத்த வஞ்சனைத் தொழிலால் புரை உற உணர்ந்த
வாய் யாவும்,
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி விளங்கினேல், பயன்
இலாது அன்றோ
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெருந் தடம்"
என்றான். |
துதிக்கையை முகத்தில்
பொருந்திய யானையின் கரிய முகங்
கொண்டவனாகிய கரோதரன் என்னும் பேய், முன் கூறக் கேட்ட
யோசனைகளை நகைத்து, இவற்றைச் சொல்வான்; "பொய்யின் முகத்தை
மூடி மறைத்த வஞ்சனைத் தொழிலால் பாவம் விளையுமாறு ஏனையோர்
உணர்ந்து கூறிய வழிகளெல்லாம், மெய்யைத் தன்னிடம் பொருந்தக்
கொண்டுள்ள தேவ நூலாகிய விளக்கை அடைந்து விளங்கக் கண்டுள்ள
விடத்து, பயனில்லாது போய் விடும் அல்லவா? எனவே, இருளைத்
தன்பால் மறைத்துக் கொண்டுள்ள பொய்யான புண்ணியங்களைக்
காட்டலே பாவம் புகுவதற்கான பெரும்பாதை" என்று கூறி, பின்
வருமாறு விளக்கத் தொடங்குவான் :
|