பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்531

     நீல் - 'நிலம்' என்பதன் கடைக்குறை. 'விளங்கினேல் - 'விளங்கின்'
என்றதன் பின் 'ஏல்' வேண்டாது நின்றது.


                     99
நிறைதவிர் தீய கயவரு நரகி னிலைதவிர்ந் தின்பவீ டுடலின்
சிறைதவிர் காலை யெய்தலும் விழைவார் செல்கதி
                                  யெளிதெனக் காட்டி
மறைதவி ரறத்தால் வீடுற வுள்ளி மாய்ந்தெரி நரகிடை
                                  வீழ்வார்
முறைதவி ரறங்க ணம்புளி தாமே மூழ்கிய துகளினாழ்ந் தஞ்சா
 
"நிறை தவிர் தீய கயவரும், நரகின் நிலை தவிர்ந்து, இன்ப வீடு,
                                         உடலின்
சிறை தவிர் காலை, எய்தலும் விழைவார்;செல் கதி எளிது எனக் காட்டி,
முறைதவிர் அறங்கள் நம்பு உளி, தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து,
                                         அஞ்சா,
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி, மாய்ந்து, எரி நரகிடை
                                         வீழ்வார்.

     "புலனடக்கமற்ற தீய கயவரும், உடலென்னும் சிறையை விட்டு உயிர்
பிரியுங் காலத்து நரகம் செல்லும் பாதையை விட்டு சென்று விலகி இன்ப
வீடாகிய மோட்சம் அடையவே விரும்புவர்; சென்று சேரத்தக்க மோட்ச
கதி எளிதின் அடையத் தக்கதென்று நாம் காட்ட, முறைகேடான
அறங்களை மக்கள் நம்பியவிடத்து, தாமே மூழ்கிய பாவத்தில் ஆழ்ந்து
கிடந்து, அஞ்சாமல், வேத நெறிக்கு ஒவ்வாத போலி அறத்தால் மோட்சம்
பெறுவதாகக் கருதி, இறந்த பின், நெருப்புள்ள நரகில் விழுந்து கெடுவர்.

                     100
நீர்விளை சிறந்த பற்றுறை மூழ்க னீர்த்துளி யிறைத்துயர்
                                          வாரல்
பேர்விளை யோதல் பெருமணி தரித்தல் பெருஞ்சடை நீடுற
                                          வளர்த்த
சூர்விளை யழலே கொன்றநீ றணிதல் துஞ்சினார்க் கெள்ளமு
                                          திறைத்த
லேர்விளை கதிசேர் வழியெனிற் பாவ மியன்றுறுந் தடமதா
                                          மன்றோ.