"நீர் விளை
சிறந்த பல் துறை மூழ்கல், நீர்த் துளி இறைத்து உயர்
வாரல்
பேர் விளை ஓதல், பெருமணி தரித்தல், பெருஞ் சடை நீடு உற
வளர்த்தல்,
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல், துஞ்சினார்க்கு எள்
அமுது இறைத்தல்
ஏர் விளை கதி சேர் வழி எனில், பாவம் இயன்று உறும் தடம்
அது ஆம்அன்றோ? |
"மழையால் பெருகிய
நீரைக் கொண்ட பல புண்ணியத் துறைகளில்
நீராடுதல், நீர்த் துளிகளை உயர வாரி இறைத்து வடிய விடுதல், இறைவன்
பெயர்களை மிகுதியாக ஓதுதல், பெரிய கொட்டை மணிகளை அணிதல்,
பெரிய சடையை நீளமாக வளர்த்தல், அச்சம் தரும் நெருப்பிலே எரித்து
அழித்துப் பெற்ற திருநீறு அணிதல், இறந்தோர்க்கு எள்ளும் பாலும்
தெளித்தல்: இவையெல்லாம் அழகு பொருந்திய மோட்ச கதி சேரும் வழி
யென்று ஏற்படுத்தி வைத்தால், பாவம் விளைந்து நிலைபெறுவதற்கான
பாதையாக அது அமையும் அல்லவா?
101 |
இவ்வழி
யெளிதிற் புரையெலாந் தீரு மென்றுளி
புரையின்மேற் சாய்ந்து
செவ்வழி யொழிந்த மன்னுயிர் கெடவோர் செயிர்வழி
காட்டவோ வேண்டு
மொய்வ்வழி யருவி முன்னுள விழிவின் முடுகிவந் தோடவு
நாமோ
வவ்வழி காட்டல் வேண்டுமென் றுரைத்தா னறிவள
வருங்கொடுஞ் சடத்தான். |
|
"இவ்வழி எளிதில்
புரை எலாம் தீரும் என்று உளி, புரையின் மேல்
சாய்ந்து
செவ்வழி ஒழிந்த மன் உயிர் கெட, ஓர் செயிர் வழி காட்டவோ
வேண்டும்?
மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும், நாமோ
அவ் வழி காட்டல் வேண்டும்?" என்று, உரைத்தான் அறிவு அளவு
அருங் கொடுஞ் சடத்தான். |
|