'ஆர்த்து' என
நின்று, அடுத்த பாடலில் 'என்றான்' என்பதனோடு
நிறைவு பெறும் தொடர்ப் பொருளுக்கு இசைவாக, 'பின்வருமாறு
சொல்வான்' என்று விரிக்கப்பட்டது.
103 |
மதிவள ருணர்வற்
றெசித்தனர் முன்னாள் வதைவளர் நரகிடை
வீழ்ந்தார்
நிதிவளர் கோயில் வீழ்ந்துநாம் வீழ்ந்த நிலைமையுஞ்
சூசையாங் குரைக்குந்
துதிவளர் மறையு முணர்ந்தபின் வீழ்ந்து துகளுமெண்
மடங்கெழச் சுடர்வான்
பதிவள ரிறைவற் கிகழ்ச்சியு நமக்கோர் பழிவளர் களிப்புமா
மென்றான். |
|
"மதி வளர் உணர்வு
அற்று, எசித்தனர் முன் நாள், வதை வளர்
நரகிடை வீழ்ந்தார்.
நிதி வளர் கோயில் வீழ்ந்து, நாம் வீழ்ந்த நிலைமையும், சூசை
ஆங்கு உரைக்கும்
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து, துகளும் எண் மடங்கு
எழ, சுடர் வான்
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும், நமக்கு ஓர் பழி வளர் களிப்பும்
ஆம்" என்றான். |
எசித்து நாட்டினர்
இதற்கு முந்திய காலத்தில், அறிவால் வளரும்
உணர்வு அற்றுப் போய், அதன் காரணமாகத் துன்பம் வளரும் நரகத்தில்
வீழ்ந்தனர். இனி மேல், பொன் மயமாய் வளர்ந்து நின்ற கோயில்களும்
விழுந்து, அவற்றோடு நாமும் வீழ்ந்த நிலைமையும், சூசை அங்கு
எடுத்துரைக்கும் போற்றத் தக்க வேதமும் உணர்ந்த பின் அவர்கள்
பாவத்தில் வீழ்ந்து, அதனால் அவர்கள் கொண்ட பாவமும் எட்டு
மடங்காகப் பெருகவே, அந்நிலை, ஒளி பொருந்திய வானுலகில் வாழும்
ஆண்டவனுக்கு இகழ்ச்சியாகவும், "பாவம் வளர்வதனால் நமக்கு
உண்டான ஒரு களிப்பாகவும் அமையும்" என்றான்.
|