104 |
ஐவகைப்
பொறியும் வாட்டிய சூசை யறையுநூ லுறுதியா
லன்னார்
மெய்வகைத் தவத்து நிலைபெறி னின்பம் விளையுமோ
நமக்கென வரசன்
பொய்வகைச் சடத்து நான்புகுந் தெசித்தார் புரையுற
வவன்மொழி பழித்துச்
செய்வகைத் திறத்து நிற்பரோ வென்னச் செப்பினான்
சடக்கலி மீண்டே. |
|
"ஐ வகைப் பொறியும்
வாட்டிய சூசை அறையும் நூல் உறுதியால்,
அன்னார்
மெய் வகைத் தவத்து நிலைபெறின், இன்பம் விளையுமோ நமக்கு?"
என, அரசன்,
"பொய்வகைச் சடத்து நான் புகுந்து எசித்தார் புரை உற அவன்
மொழி பழித்துச்
செய் வகைத் திறத்து நிற்பரோ?" என்னச் செப்பினான் சடக்கலி
மீண்டே: |
பேய்க்கரசன்,
"ஐம்பொறிகளையும் அடக்கிய சூசை சொல்லும் வேத
நூலின் உறுதியால், அவ்வெசித்தியர் மெய்யான தவத்தில் நிலை
கொள்வாராயின், அவ்வின்பம் நமக்கு விளையுமோ?" என்னவும், சடக்கலி
"பொய்யான வஞ்சனையோடு நான் இடையே புகுந்து, எசித்தியர் பாவத்தில்
விழுமாறு அவன்சொல்லைப் பழித்துச் செய்யும் பலவகைத் திறத்தின்முன்
தவத்தில் நிலை கொள்வரோ?" என்று மீண்டும் தொடர்ந்து சொல்லலானான்.
105 |
கொக்கணி
முடுயுங் கொடிச்சடைச் சிரமுங் குண்டலச்
செவியும் வெண்பலியை
மிக்கணி நுதலும் பொறியடுந் தவத்து மெலிவொடு வாடிய
முகமு
மக்கணி மார்புந் தண்டொடு கரக வங்கையு மிவற்றொடு
மறையைத்
தொக்கணி வேட முனிவர னெனநான் றோன்றியாங்
கெவரையும் வெல்வேன். |
|