"'பழமை தொட்டே
நம்மைக் காத்து வந்த தேவர்களை நீக்கிவிட்டு,
புதியதோர் இறைவனைத் தொழுவதோ?' என்பேன்; 'கணக்கில்லாத நம்
முன்னோர் நடந்த நெறி இழிவு பயக்கும் பழுது உள்ளதோ?' என்பேன்;
'அறிவில்லாத ஒருவன் சொற்களைக் கேட்டு, நெடு நாள் செய்த தவத்தின்
பயனை, ஒரு நொடியில் இழந்து போவதோ?' என்பேன்; 'அற்பர் தந்த
கொடிய புது முறையை, தோட்டத்தில் வந்து முளைத்த களை போல,
நீங்களே கொய்து களைந்து விடுங்கள்' என்பேன்.
107 |
புற்குலத்
துதித்துப் பொலிசையற் றெய்திப் புறத்துநாட்
டிரந்துசேர்ந் தொருவன்
சொற்குலத் திழிவிற் பிதற்றிய கதைகள் சுருதியோ நூன்மலி
நாட்டின்
னற்குலத் துதித்த நீர்புற நீச நவமுறை யொழுகவு தன்றோ
தற்குலத் திழிவி தென்றுள மருட்டுஞ் சடத்தொழிற் கரிதுண்டோ
வென்றான். |
|
"'புன் குலத்து
உதித்து, பொலிசை அற்று எய்தி, புறத்து நாட்டு
இரந்து சேர்ந்து ஒருவன்
சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள் சுருதியோ? நூல் மலி
நாட்டில்,
நல் குலத்து உதித்த நீர், புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ?
தன் குலத்து இழிவு இது' என்று, உளம் மருட்டும் சடத் தொழிற்கு
அரிது உண்டோ?' என்றான். |
"'இழிந்த குலத்தில்
பிறந்து, பிழைப்பிற்கு வழியின்றி வந்தடைந்து,
அயல் நாட்டில் பிச்சையெடுத்துத் தங்கியுள்ள ஒருவன், சொல்லின்
குலத்துக்கு இழிவு நேருமாறு பிதற்றிய கதைகள் வேதமாகுமோ? உயர்ந்த
நூல்கள் நிறைந்துள்ள இந்நாட்டில், நல்ல குலத்தில் பிறந்த நீங்கள்,
உமக்குப் புறம்பான நீசமுள்ள புதிய நெறியில் நடப்பதும் நல்லதோ? தன்
குலத்துக்கே இழிவு இது' என்று, கேட்போர் உள்ளத்தை மயங்கச் செய்யும்
என் வஞ்சகத் தொழிலுக்கு இயலாததும் உண்டோ?" என்றான்.
சொல்
குலத்துக்கு இழிவாவது, நாட்டு மொழியை அயலார் முறையாக
உச்சரிக்க இயலாது சொல்வதனால் அம்மொழிக்கு ஏற்படும் இழிவு.
|