பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்538

                     108
பொய்நிறத் துரைத்த திழிவுற வெளியாய்ப் பூதலத் தொருப்படப்
                                  பிறந்து
மெய்நிறத் துயர்தொல் வேதம தென்றும் விரியொளி
                                  மணிமுடி வேந்தர்
செய்நிறக் குலத்தோ னம்முனி யென்றுந் திருப்புகழ்
                                  கலைநிறை மாட்சி
பெய்நிறத் தவனா டென்றுமாங் குணர்கிற் பிழையுனக்
                                  கென்றனன் வேந்தே.
 
"பொய் நிறத்து உரைத்தது இழிவு உற வெளி ஆய், பூதலத்து
                            ஒருப்படப் பிறந்து
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும், விரி ஒளி மணி
                            முடி வேந்தர்
செய் நிறக் குலத்தோன் அம் முனி என்றும், திருப் புகழ் கலை
                            நிறை மாட்சி
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில், பிழை
                            உனக்கு" என்றனன் வேந்தே.

     பேய்க்கரசன் அது கேட்டு, "நீ பொய்யைத் தழுவி உரைத்தது
உனக்கே இழிவைத் தருமாறு வெளிப்பட்டு, அதுவே பூமியில் ஒன்றாக
உடன் தோன்றி மெய்யோடு பொருந்தி உயர்ந்த பழமையான வேதமென்றும்,
அம் முனிவன் விரிந்த ஒளி கொண்ட மணி முடியை அணியும் மன்னரைப்
பிறப்பித்த புகழ்பெற்ற குலத்தில் பிறந்தவன் என்றும், தெய்வத் திருப்புழும்
கலைகளும் நிறையக் கொண்ட மாண்பு பொருந்திய தன்மையது
அவனுக்குரிய நாடு என்றும் அங்கு எசித்தியர் உணர்வாராயின், உனக்குக்
கேடு" என்றான்.

                     109
எண்வழி தவறி யுள்ளிய சூட்சி யிதுவென வெறியெலா மிரட்ட
விண்வழி யசனி யொலியெழ நக்கு வெவ்வினைச் சடக்கலி
                                         விளம்புங்
கண்வழி யுற்ற வுணர்வின்முன் மாக்கட் காதிடு முணர்வெவன்
                                         செய்யுந்
தெண்வழி யுவரிச் சுறவுதன் காதை தெரிகிலேற் கேண்மினோ
                                         வென்றான்.