"எண் வழி தவறி
உள்ளிய சூட்சி இது!" என வெறி எலாம் இரட்ட,
விண் வழி அசனி ஒலி எழ நக்கு, வெவ்வினைச் சடக்கலி, விளம்பும் :
"கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு, எவன்
செய்யும்?
தெண் வழி உவரிச் சுறவு தன் காதை தெரிகு இலேல், கேண்மினோ"
என்றான் : |
"எண்ணும் முறை
தவறிக் கருதிய திட்டம் இது!" என்று மற்றப்
பேய்களெல்லாம் முழங்கவே, கொடுஞ் செயல் கைவந்த சடக்கலி, விண்ணில்
தோன்றும் இடியோசை பிறக்குமாறு நகைத்து, இவ்வாறு சொல்வான்:
"மக்களின் காதுகளில் இட்டு வைக்கும் பேச்சால் பெற்ற அறிவு, கண்ணாற்
கண்டு கொள்ளக் கூடிய அறிவின் முன் என்ன செய்யும்? தெளிந்த நீரைத்
தன்னகத்துக் கொண்ட கடலிலுள்ள சுறாமீனின் கதை தெரியாதாயின், நான்
சொல்லக் கேளுங்கள்" என்று, தொடர்ந்து சொல்லலானான்.
110 |
வெள்ளமே
லெதிர்த்த விளஞ்சுறா கூவல் விழவெவ ணீயெனக்
குழிமீன்
கொள்ளமேற் கரையு மளவுமற் றாழ்ந்து கொழிமணி கொழித்த
நீண் புணரி
யுள்ளமேற் சிறப்புக் கூறவிக் குழியோ டொத்ததுண் டோவென
நகவிப்
பள்ளமே யுறையுங் காலைநீ ருரைத்த பழியெலாஞ் செல்லுமென்
றதுவே. |
|
"வெள்ள மேல்
எதிர்த்த இளஞ் சுறா, கூவல் விழ, 'எவண் நீ?'
எனக் குழி மீன்
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று, ஆழ்ந்து, கொழு மணி
கொழித்த நீண் புணரி
உள்ளமேல் சிறப்புக் கூற, 'இக் குழியோடு ஒத்தது உண்டோ?' என
நக, 'இப்
பள்ளமே உறையும் காலை, நீர் உரைத்த பழி எலாம் செல்லும்'
என்றதுவே. |
|