"கடலில்
வந்து பாய்ந்த ஆற்று வெள்ளத்தின் மேல் எதிர்த் தேறி
வந்த சுறா மீன் குஞ்சு, துள்ளிக் குதித்து கிணற்றுக்குள் விழவே, கிணற்று
மீன்கள், 'நீ எவ்விடத்தாய்' என வினவ, அச் சுறா மீன், தன் நீரை
அடக்கிக் கொள்ள மேலே கரையும் பரப்பிற்கு அளவும் அற்று,
அவ்வாறே அளவில்லாத ஆழமும் கொண்டு தன்னிடமுள்ள
கொழுமையான மணிகளைக் கரைமேல் கொழித்து ஒதுக்கும் நீண்ட
கடலிடத்துள்ள மேன்மையான சிறப்பை எடுத்து கூறியது. அது கேட்ட
கிணற்று மீன்கள், 'இக்கிணற்றோடு ஒப்புக் கூறவும் வேறொன்று உண்டோ?'
என்று அச்சுறாவை நகைத்தன. அது, 'இந்தப் பள்ளத்தில் நான் தங்கும்
காலம் வந்துற்றமையால், நீங்கள் கூறிய இகழ்ச்சியெல்லாம் செல்லுபடி
ஆவதாம்' என்று கூறி அமைந்தது.
கடலோடு ஒப்பு
நோக்குமிடத்து பெரிய கிணறும் ஒரு சிறு குழிக்கே
நிகராகுமென்ற கருத்தால், கிணறு இங்குக் குழி எனப் பட்டது. 'பள்ளம்'
என்றதற்கும் இது ஒக்கும். "சூசை முடி சூடிய அரசர் குலத்தோனாயினும்,
அவன் உரைத்த நூல் உலகத்தோடு துவக்கி மெய்யான வேதமாயினும்,
அவன் பிறந்த நாடு பெருமையிற் சிறந்ததாயினும், அவன் புறநாட்டில்
இருக்குமளவும் இவையெல்லாம் செல்லால், சொன்ன நிந்தை
செல்லுமென்பது கருத்து," என்பது பழையவுரை அடிக்குறிப்பு.
111 |
மீளவுங்
கருவித் தழியவு மழியா வெண்ணெயிற் றிரண்டபின்
கெடவு
நீளவுங் கெடாது பிறந்துமாய்ந் திடவு நின்றுநற் கலைத்துறை
யுறுங்கான்
மாளவு மாளா நோயிறீந் திறவு மக்களை வருத்தின்னா
செயுங்கா
லாளவுஞ் செய்வே னத்துயர் தீர வருச்சனை வழங்கவுஞ்
செய்வேன். |
|
"மீளவும் கரு
வித்து அழியவும், அழியா வெண்ணெயின் திரண்ட பின்
கெடவும்,
நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும், நின்று நல் கலைத் துறை
உறுங்கால்,
மாளவும், மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா
செயுங்கால்,
ஆளவும் செய்வேன்; அத்துயர் தீர, அருச்சனை வழங்கவும்
செய்வேன். |
|