"மேலும், எசித்தாரிடையே
கருப்பம் வித்தாகவே அழியவும், அவ்வாறு
அழியாமல் வெண்ணெய் போல் கருப்பம் திரண்ட பின் அழியவும், கருப்பம்
நீண்ட நாள் கெடாமல் பிள்ளையாய்ப் பிறந்து இறக்கவும், அதற்கும் தப்பி
நின்று நல்ல கலைத்துறைகளைக் கற்குங் காலத்து இறக்கவும், அப்போதும்
இறவாமல் தீராத நோயால் வெந்து மடியவும் - இவ்வாறாக மக்களை
வருத்தும் துன்பங்களைச் செய்து ஆட்சி புரிவேன்; அத் துன்பங்கள் தீரும்
பொருட்டு வழிபாடு நிகழ்த்துமாறும் செய்வேன்.
'இறக்கவும்'
என்றது 'இறவும்' என்றது செய்யுளுக்காய் வந்த விகாரம்.
112 |
இற்றைநான்
செய்யா வாண்டவன் விலக்கி லியன்றுறு நோய்துய
ரிடுக்கண்
மற்றையா வையுந்தா மொழிந்த தொற்றேவர் மனச்சினத்
தயர்ந்தவை யென்பே
னற்றைநான் செயுங்கா லம்முனி யுய்த லரியதாய் வீழ்ந்தவர்ச்
சனைகொண்
டொற்றையா ழியினீ யாளுவா யென்ன வுரைத்தனன் சடக்கலி
மாதோ. |
|
"இற்றை நான்
செய்யா ஆண்டவன் விலக்கில், இயன்று உறு நோய்
துயர் இடுக்கண்
மற்றை யாவும், தாம் ஒழிந்த தொல் தேவர் மனச் சினத்து
அயர்ந்தவை என்பேன்.
அற்றை நான் செயுங் கால், அம் முனி உய்தல் அரியது ஆய்,
வீழ்ந்த அர்ச்சனை கொண்டு,
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய்" என்ன உரைத்தனன் சடக்கலி
மாதோ. |
"இதனையெல்லாம்
நான் செய்யாதவாறு ஆண்டவன் விலக்கினால்,
இயல்பாக ஏற்படும் நோய் துயரம் துன்பம் மற்ற எல்லாமும், தாம்
வழிபடாது ஒழிந்த பழமையான தேவர்கள் மனத்துக் கொண்ட சினத்தால்
செய்தவை என்று சொல்லுவேன். அதனை நான் செய்யும் காலத்து,
அம்முனிவன் உயிர் பிழைத்தலும் அரிதாய்ப் போகவே, நின்றுபோன
வழிபாடுகளை நீ திரும்பவும் பெற்று, ஒரே ஆணைச் சக்கரத்தால் நீயே
எசித்தை ஆள்வாய்" என்று சடக்கலி கூறினான்.
'மாதோ'
அசை நிலை.
|