117 |
இன்புறப்
பாற்கலந் தேத மூட்டுதீர்
துன்புற வெருட்டுதீர் துதியை யாடுதீ
ரன்புற வணிகுதீ ரனைவ ருங்கனற்
பின்புற வருந்துதீர் பிழைப்பெ மக்கிதே. |
|
"இன்பு உறப்
பால் கலந்து ஏதம் ஊட்டுதீர்;
துன்பு உற வெருட்டுதீர்; துதியை ஆடுதீர்;
அன்பு உற அணுகுதீர்; அனைவரும் கனல்
பின்பு உற வருந்துதீர்; பிழைப்பு எமக்கு இதே. |
"மக்கள் இன்புறுமாறு
பாலைக் கலந்தாற் போலப் பாவத்தை
இன்பத்தோடு கலந்து ஊட்டுங்கள். தேவை நோக்கி, துன்புறச் செய்து
அஞ்சச் செய்யுங்கள்; புகழை வேண்டிய விடத்துக் கையாளுங்கள்;
அன்பு கொண்டுள்ளதாகக் காட்டி அணுகுங்கள்; அனைவரும் பின் நரக
நெருப்பில் வந்து சேருமாறு முயலுங்கள். இதுவே நமக்குப் பிழைப்புத்
தொழில்.
118 |
உள்ளிய
வஞ்சனை யுதவ வவ்விரு
தெள்ளிய அறிவினோர் திறம்பி லாத்தவம்
விள்ளிய முறையொடு வினைகொண் டாலலா
லெள்ளிய கசடுகுத் தெசித்தி லாளவோ. |
|
"உள்ளிய வஞ்சனை
உதவ, அவ் இரு
தெள்ளிய அறிவினோர், திறம்பு இலாத் தவம்
விள்ளிய முறையொடு, வினை கொண்டால் அலால்,
எள்ளிய கசடு உகுத்து எசித்தல் ஆளவோ? |
"நாம் கருதிய
வஞ்சனை நமக்கு உதவும்படி, சூசையும் மரியாளுமாகிய
தெளிந்த அறிவு படைத்த அவ்விருவரும், தவறுதல் இல்லாத தம் தவத்தைக்
கைவிட்ட முறையோடு, பாவத்தைச் செய்யவும் முற்பட்டாலன்றி, இகழப்படும்
பாவத்தைப் பெய்து எசித்தில் நாம் ஆள இயலுமோ?
|