119 |
இத்திறத்
தாங்குறை யிரண்டு யூதர்கள்
மைத்திறத் துளங்கெடின் வழங்கும் வெற்றியென்
றெத்திறத் திலுமொருங் கியன்ற நாமெலாம்
பொய்த்திறத் தவரைமுன் பொருதல் வேண்டுமால். |
|
"இத் திறத்து,
ஆங்கு உறை இரண்டு யூதர்கள்
மைத் திறத்து உளம் கெடின், வழங்கும் வெற்றி என்று,
எத் திறத்திலும் ஒருங்கு இயன்ற நாம் எலாம்,
பொய்த் திறத்து அவரை முன் பொருதல்
வேண்டும் ஆல். |
"இவ்வகையாய்,
அங்கு வாழும் அவ்விரண்டு யூதர்களின் உள்ளமும்
இருளின் தன்மையாகக் கெடுமாயின், நமக்கு வெற்றி கிட்டுமென்று மதித்து,
ஒருங்கு கூடியுள்ள நாமெல்லாம், எந்த வகையிலேனும், நமது பொய்யின்
திறத்தால் அவர்களோடு முதலில் போர் தொடுத்தல் வேண்டும்.
'ஆல்' அசைநிலை.
120 |
அனைவரு மோரணி
யாக வாகவ
நினைவரு முரத்தொடு நிகர்த்த நீர்மையால்
வினைவரு முகத்தவர் மெலிய வென்றபின்
னனைவரு மெசித்தெலா நயப்ப வெல்லுவாம். |
|
"அனைவரும் ஓர்
அணியாக ஆகவம்
நினைவு அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால்,
வினை வரும் முகத்து, அவர் மெலிய வென்ற பின்,
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம். |
"போர்ச் செயல்
தொடங்குமிடத்து, நாம் அனைவரும் ஒரே
படையணியாக நின்று, அங்கே அவர்கள் நினைத்தற்கரிய வலிமையோடு
அதனைச் செய்த தன்மையால் அவர்களை மெலியுமாறு வென்ற பின், பூ
வரும்புகள் தோன்றும் எசித்து நாடு முழுவதையும் நாம் விருப்பத்திற்கு
ஏற்ப வெல்லுவோம்.
|