பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்550

     நெருப்பை விளைவிக்கும் காமமே அம்பாகவும், சினமே உறுதியான
வாளாகவும், துன்பம் விளைவிக்கும் பொறாமையே வேலாகவும், ஈயாது
மடங்கிய கைக்கு உரிய கஞ்சமே சக்கரமாகவும், வாயால் விளையும்
பொய்யே நெடிய ஈட்டியாகவும், சோம்பலே நெடிய தண்டாயுதமாகவும்
ஏந்தி நின்று, தாம் விளைவிக்கும் போரில் அப்பேய்கள் கைக்கொள்ளும்
பெருமை கொண்ட படைக் கருவிகள் இவையே ஆகும்.

     'இவையே ஆகும்' என்ற முடிப்புத் தொடர் வருவித்து
உரைக்கப்பட்டது, 'அன்றோ' அசை நிலை. 'தீ' என்பது, எதுகை
நோக்கி, 'தீய்' எனத் திரிந்து நின்றது.

                   4
நீரணி யுலக மாட நெடுங்கட லொடுங்கிப் பொங்கக்
காரணி வானம் விம்மக் காரண மறியா மாக்கள்
சூரணி யுளத்திற் கூசச் சுடுநர கலகை யாவும்
பேரணி யாகச் செல்லப் பேய்க்கர செழுந்த தன்றோ.
 
நீர் அணி உலகம் ஆட, நெடுங் கடல் ஒடுங்கிப் பொங்க,
கார் அணி வானம் விம்ம, காரணம் அறியா மாக்கள்
சூர் அணி உளத்தின் கூச, சுடு நரகு அலகை யாவும்
பேர் அணியாகச் செல்ல, பேய்க்கு அரசு எழுந்தது அன்றோ.

     கடல் நீரை ஆடையாக அணிந்த மண்ணுலகம் நடுங்கவும், நெடிய
கடல் ஒடுங்கிப் பொங்கவும், மேகங்களை அணியாகக் கொண்ட வானுலகம்
விம்மவும், இவற்றிற்கெல்லாம் காரணம் அறியாத மக்கள் அச்சம் கலந்த
உள்ளத்தோடு கூசி நிற்கவும், சுடும் தன்மையுள்ள நரகப் பேய்கள் யாவும்
பெரிய படையணிகளாக முன்னே செல்ல, பேய்க்கரசன் எழுந்து வந்தான்.

     'அன்றோ' அசைநிலை. அரசனை 'அரசு' என அஃறிணைப் பெயராற்
கட்டியமையின், 'எழுந்தது' என அஃறிணை முடிவு கொண்டது.

                     5
எழுந்தழ லிடியே றன்ன வேழெரி வாய்கொண் டார்த்துக்
கொழுந்தழல் விழிக டும்மிக் குணுக்கினத் தரச னெஞ்சத்
தழுந்தழன் முனிவின் மற்ற வலகையோ டெழுவ கண்டு
விழுந்தழ வுளத்துண் டென்ன விண்ணவ ரிரங்கி நொந்தார்.