|
எழுந்து, அழல்
இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து,
கொழுந் தழல் விழிகள் தும்மி, குணுங்கு இனத்து அரசன், நெஞ்சத்து
அழுந்து அழல் முனிவின், மற்ற அலகையோடு எழுவ கண்டு,
விழுந்து அழல் உளத்து உண்டு என்ன, விண்ணவர், இரங்கி நொந்தார். |
பேய்க்கூட்டத்திற்கு
அரசன் நரகத்தினின்று எழுந்து, நெருப்பைக்
கக்கும் கோடையிடி போலத் தனது ஏழு வாய்களாலும் முழக்கஞ் செய்து,
தன் கண்களினின்று கொழுமையான நெருப்பைக் கக்கி, தன் நெஞ்சத்தில்
அழுந்திய நெருப்புப் போன்ற சினத்தோடும் மற்றப்பேய்களோடும் எழுந்து
வருதலைக் கண்டு, வானவர்கள், நெருப்பு தன் உள்ளத்தில் விழுந்து தாம்
அதனை உண்டதுபோல, என்ன தீங்கு நேருமோ என்று இரங்கி இவ்வாறு
வருந்தினர்.
குணுக்கு + இனம்
- குணுக்கு + இனம்: குணுக்கினம். 'எழுவது'
என்பது கடைக் குறையாய், 'எழுவ' என நின்றது.
| 6 |
ஐவகைப்
பொறியின் மொய்த்த வைம்பகை கொலையிற் சூழ்ந்து
மெய்வகைத் திறத்தி லீனம் விளைந்துளந் தெளியா மாக்கள்
பொய்வகைச் சடத்தி லாண்மை பொலிந்தபேய் திரண்டு செய்யு
மைவகைச் சமரி னிற்பர் வையகத் தெவரோ வென்பார். |
| |
"ஐ வகைப் பொறியின்
மொய்த்த ஐம் பகை கொலையின் சூழ்ந்து,
மெய் வகைத் திறத்தில் ஈனம் விளைந்து, உளம் தெளியா மாக்கள்,
பொய் வகைச் சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும்
மை வகைச் சமரில், நிற்பார் வையகத்து எவரோ?" என்பார். |
"ஐம்பொறிகளின்
வாயிலாக மொய்த்த ஐந்து வகை ஆசைகளாகிய
ஆன்மப் பகை கொலை போலச் சூழ்ந்து நிற்றலால், உடலோடு பொருந்திய
தம் இயல்பில் பாவமாகிய ஈனம் விளைந்து, அதனால் உள்ளம் தெளியாத
|