பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்552

மக்கள், பொய்யை அடிப்படையாகக் கொண்ட வஞ்சனையில் திறமை
பூண்டு விளங்கிய பேய்கள் இவ்வாறு திரண்டு செய்யவிருக்கும் இருள்
மயமான போரில், இவ்வுலகத்தில் ஈடுகொடுத்துப் புண்ணியத்தில் எவர்
தாம் நிலைபெறுவர்?" என்பர்.

                    7
திக்கெலா நடுங்கிஞானந் தெருவட மறத்தின்சீல
மிக்கெலா மொதுங்கி நீங்க வெகுண்டவித் தன்மை பாரிற்
புக்கெலா வெறிகள் சேர்காற் பொய்கொலை களவு காமந்
தொக்கெலாம் பரந்து மாக்கட் டொகையிலா ருய்வ
                                       ரென்பார்.
 
"திக்கு எலாம் நடுங்கி, ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம்
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க, வெகுண்ட இத் தன்மை பாரில்
புக்கு எலா வெறிகள் சேர் கால், பொய் கொலை களவு காமம்
தொக்கு எலாம் பரந்து, மாக்கள், தொகையில் ஆர் உய்வார்?"
                                           என்பார்.

     "திசைகளெல்லாம் நடுங்கி, ஞானமும் தெளிவும் தவமும்
அறவொழுக்கமும் ஆகிய எல்லாம் மிகவே ஒதுங்கி விலகுமாறு, சினந்த
இத்தன்மையாக இவ்வுலகில் பேய்களெல்லாம் ஒருங்கே புகுந்து சேர்ந்து
நின்றவிடத்து, பொய்யும் கொலையும் களவும் காமமும் போன்ற எல்லாம்
தொகையாகப் பரந்து, மக்கள் தொகையிடையே எவர் தாம் தப்பிப்
பிழைப்பார்?" என்பர்.

                     8
செவ்வினை நாட்டப் பாரிற் சிறுவனா யுதித்த நாத
னிவ்வினை யனைத்து நீக்கி யிரங்கிலான் கொல்லோ
                                    வென்ன
நவ்வினை விடாநல் லாளு நறுங்கொடி யோனும் வெல்ல
வெவ்வினை யுணர்பேய் நோக்கும் வினவெனக் கண்டு
                                    நக்கார்.
 
"செவ் வினை நாட்டப் பாரில் சிறுவனாய் உதித்த நாதன்,
இவ் வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்
                               கொல்லோ?" என்ன,
நவ்வினை விடா நல்லாளும் நறுங் கொடியோனும் வெல்ல,
வெவ் வினை உணர் பேய் நோக்கும் வினவு
                               எனக் கண்டு நக்கார்.