"நற்செயலை
நிலைநாட்டவென்று மண்ணுலகில் குழந்தையாய்த்
தோன்றியுள்ள ஆண்டவன், இவ் வஞ்சகச் செயல் அனைத்தையும் நீங்கச்
செய்து, மக்களுக்கு இரங்க மாட்டானோ?" என்று வருந்தி, தவத்தை
விடாத நல்லவளாகிய மரியாளையும் மணமுள்ள மலர்க் கொடியைத்
தாங்கியுள்ள சூசையையும் வெல்லவென்று, கொடிய செயலைக் கருதியுள்ள
பேய்கள் நோட்டம் பார்க்கும் ஆய்வு இதுவெனக் கண்டு நகைத்தனர்.
'கொல்'
அசைநிலை.
9 |
அருண்முகத்
துதித்த நாத னவனென வறியா வண்ணத்
திருண்முகத் துவந்து வெற்றி யெளிதென வுணர்பேய் சோதி
தெருண்முகத் திரவொத் தாற்றா சிதைவிறீஇ வெருவுற் றெஞ்சி
மருண்முகத் தெரியில் வீழ்ந்து மாள்வன வொருங்கு மென்பார். |
|
"அருள் முகத்து
உதித்த நாதன் அவன் என அறியா வண்ணத்து,
இருள் முகத்து உவந்து, வெற்றி எளிது என உணர் பேய், சோதி
தெருள் முகத்து இரவு ஒத்து, ஆற்றா சிதைவு உறீஇ, வெரு
உற்று எஞ்சி,
மருள் முகத்து எரியில் வீழ்ந்து மாள்வன ஒருங்கும்"என்பார். |
"மக்கள் மீது
கொண்ட அருளால் அவதரித்துத் தோன்றிய
ஆண்டவனே அவனென அறியாத் தன்மையால், தம் மன இருளால்
மகிழ்ந்து, தமக்கு வெற்றி எளிதென்று கருதிய பேய்கள், பகலவனின்
தெளிந்த முகத்தெதிரே இருளே போன்று முன் நிற்க மாட்டாமல்
சிதைந்து, அச்சங்கொண்டு மெலிந்து, மயக்கங்கொண்டு மீண்டும் நரக
நெருப்பில் வீழ்ந்து ஒருங்கே கெடுவன ஆகும்" என்பார்.
10 |
மன்றலர்க்
கொடியின் வாச மண்ணையை மருட்டு மென்பார்
துன்றலர்க் கோதை கன்னி சுடவெறி முரியு மென்பார்
என்றலர்ச் சுடிகை சூடி யிருவிசும் பெங்கு நிற்பார்
நின்றலர்த் தொடைக ளேந்தி நிகர்த்தபேய்த் தோர்வை
காண்பார். |
|