பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்554

"மன்று அலர்க் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும்"
                                         என்பார்;
"துன்று அலர்க் கோதை கன்னி சுட, வெறி முரியும்" என்பார்;
என்று, அலர்ச் சுடிகை சூடி, இரு விசும்பு எங்கும் நிற்பார்,
நின்று, அலர்த் தொடைகள் ஏந்தி, நிகர்த்த பேய்த் தோர்வை
                                         காண்பார்.

     "சூசை ஏந்திய மணமுள்ள மலர்க் கொடியின் மணம் அப் பேய்களை
மயக்கும்" என்பர்; "செறிந்த மலர்களாகிய மாலை போன்ற மரியாளின்
கன்னிமை சுடுதலால், பேய்கள் முறிந்தோடும்" என்பர்; என்று
இவ்வாறெல்லாம் அவ்வானவர் கூறி, மலர் மாலைகளை முடியாகச் சூடி
நின்று, மலர் மாலைகளை கையிலும் ஏந்திக்கொண்டு, நிகரென்று போருக்கு
எழுந்த பேய்களின் தோல்வியைக் காணும் தன்மையராய், பெரிய வானத்தில்
எங்கும் நிறைந்து நிற்பர்.

     கைகளில் ஏந்திய மாலை, வெற்றி கொள்ளும் சூசை மீதும் மரியாள்
மீதும் மலர் மாரியாகப் பொழிதற் பொருட்டாம்.

                      11
கான்மலி கொடியிற் கன்னி கடிமல ரெனக்கை யேந்தும்
வான்மலி மகவின் மாமை வடிந்ததே னுணும் வண் டொப்பத்
தேன்மலி கொடியோ னின்பந் திளைப்பவுட் சுவைத்த காலை
கூன்மலி சடத்த பேய்கள் குணித்தபோர் தொடங்கிற் றன்றோ.
 
கான் மலி கொடியின் கன்னி கடி மலர் எனக் கை ஏந்தும்
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப,
தேன் மலி கொடியோன் இன்பம் திளைப்ப உள் சுவைத்த காலை,
கூன் மலி சடத்த பேய்கள் குணித்த போர் தொடங்கிற்று அன்றோ.

     மணம் மிக்க மலர்க் கொடி போன்ற கன்னித்தாய் மணமுள்ள மலர்
போலத் தன் கையில் ஏந்தியிருக்கும் குழந்தை நாதனின் வானுலகிற்குரிய
அழகாகிய வடிந்த தேனை உண்ணும் வண்டிற்கு ஒப்பாக, தேன் நிறைந்த
மலர்க் கொடியைத்