தாங்கிய சூசை இன்பத்தில்
மூழ்குமாறு மனத்துள் சுவைத்து நின்றபோது,
கோணல் நிறைந்த வஞ்சனை கொண்ட பேய்கள் கருதிய போர்
தொடங்கிற்று.
'அன்றோ' அசைநிலை.
பேய்களின்
திண்டாட்டம்
- விளம்,
- விளம், - மா, கூவிளம்
12 |
ஈங்கொரு
விழாவணி யென்ன மூவரே
வீங்கொரு மகிழ்வருட் சுவைவிள் ளாமையி
லாங்கொரு காவத மகல நின்றபே
யோங்கொரு வயந்தடுத் தொருவிற் றென்னவே. |
|
ஈங்கு ஒரு விழா
அணி என்ன மூவரே
வீங்கு ஒரு மகிழ்வு அருட் சுவை விள்ளாமையில்,
ஆங்கு ஒரு காவதம் அகல நின்ற, பேய்,
ஓங்கு ஒரு வயம் தடுத்து ஒருவிற்று என்னவே. |
இங்கு ஒரு விழாக்
கோலம் போலச் சூசையும் மரியாளும் குழந்தை நாதனுமாகிய இம் மூவரும் பெருகிய ஒரு மகிழ்ச்சியோடு
தெய்வத் திருவருளின் சுவையை விடாது நுகர்ந்து நிற்கையில், பேய்கள், உயர்ந்த
ஒரு வல்லமை தம்மைத் தடுத்துத் தள்ளியது போல், அங்கே ஒரு காத
தூரம் அகன்று நின்றன.
13 |
அஞ்சலே
தப்புறத் தணுகி லாத்திறத்
தெஞ்சலே திரந்திரு மைந்த ரீடிவண்
விஞ்சலே துலகெலாம் வென்ற வஞ்சனை
துஞ்சலே தெனவெறி சளித்துச் சீறின. |
|
"அஞ்சல் ஏது?
அப் புறத்து அணுகு இலாத் திறத்து
எஞ்சல் ஏது? இரந்த இரு மைந்தர் ஈடு இவண்
விஞ்சல் ஏது? உலகு எலாம் வென்ற வஞ்சனை
துஞ்சல் ஏது?" என வெளி சுளித்துச் சீறின. |
|