பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்556

     "நாம் அஞ்சுவதற்குக் காரணம் யாது? அப்பக்கம் அணுக இயலாத
விதமாய் நாம் மெலிதல் எதனால்? இரந்து பிழைக்க வந்த இரு மானிடரின்
வலிமை இங்கு நமக்கு மிஞ்சுவது எதனால்? உலகத்தையெல்லாம் வென்ற
நம் வஞ்சனை அழிவதற்குக் காரணம் யாது?" என்றெல்லாம் அப்பேய்கள்
சினந்து சீறின.

     இரந்த + இரு - 'இரந்தவிரு' எனற் பாலது, 'இரந்திரு' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று.

                 14
மின்னுள விடியினார்த் தழல்கண் விட்டதிர்
பின்னுள குணுக்கினம் பெரிது தைத்தலின்
முன்னுள வெறியெலா முழங்கி யப்புறங்
கொன்னுள வயஞ்செலா குலைய நின்றவே.
 
மின் உள இடியின் ஆர்த்து, அழல் கண்
                            விட்டு, அதிர்
பின் உள குணுங்கு இனம், பெரிது உதைத்தலின்,
முன் உள வெறி எலாம் முழங்கி, அப் புறம்
கொன் உள வயம், செலா, குலைய நின்றவே.

     இதனால் அதிர்ச்சி அடைந்த பின் பக்கத்துள்ள பேய்க் கூட்டம்,
மின்னலோடு கூடிய இடிபோல் முழங்கி, கண்களில் நெருப்பு எழ விட்டு,
பெரிதும் உதைத்து முன்நோக்கித் தள்ளியமையால், முன் பக்கத்துள்ள
பேய்களெல்லாம் முழங்கி, தம்மிடத்துள்ள வலிமை யெல்லாம் வீணாகி,
அப்பக்கம் முன்னேறிச் செல்ல இயலாது குலைந்து, அவ்விடத்தே நின்று
போயின.

               15
காலொடு பிணித்தபல் லுழுவை காய்கதச்
சாலொடு தொடர்கடித் தலறித் தாவின
பாலொடு மப்புறம் பாய வாற்றிலா
மாலொடு வெகுண்டபேய் சமர்வ ளர்த்தவே.
 
காலொடு பிணித்த பல் உழுவை, காய் கதச்
சாலொடு, தொடர் கடித்து அலறித் தாவின
பாலொடும், அப்புறம் பாய ஆற்று இலா
மாலொடு வெகுண்ட பேய், சமர் வளர்த்தவே.