தூணோடு கட்டப்பட்ட
பல புலிகள், காயும் சினத்தின் மிகுதியால்,
கட்டிய சங்கிலியைக் கடித்துக் குதித்த தன்மையாக, அங்கிருந்து
அப்பக்கமாய்ப் பாய்ந்து செல்ல இயலாத மயக்கத்தோடு சினந்த பேய்கள்,
அங்கு நின்றே போரை வளர்த்தன.
16 |
பரியுருத்
தகருருப் பகடு ருப்பகைக்
கரியுருக் கரத்துருக் கவியு ருக்கதத்
தரியுருக் கரடிகோட் டரிக ணாய்வரி
திரியுருத் தோற்றின சினந்த பேய்களே. |
|
பரி உரு, தகர்
உரு, பகடு உரு, பகைக்
கரி உரு, கரத்து உரு, கவி உரு, கதத்து
அரி உரு, கோட்டு அரிகள் நாய் வரி
திரி உருத் தோற்றின, சினந்த பேய்களே. |
சினந்த பேய்கள்,
குதிரை உருவமும், ஆட்டுக் கிடாய் உருவமும்,
எருமைக் கடா உருவமும், பகைகொண்ட யானை உருவமும், கழுதை
உருவமும், குரங்கு உருவமும், சினம் கொண்ட சிங்க உருவமும், கரடி
உருவமும், கொம்புள்ள பன்றிகளின் உருவமும், நாய் உருவமும், புலி
உருவமுமாக மாறிய உருவங்களைக் காட்டி நின்றன.
'அரி' என்ற
பல பொருள் ஒரு சொல், 'கோட்டு' அடையாகக்
கொண்டமையின், கொம்பைப் போன்று வலிமையான வாயையுடைய
பன்றியைக் குறித்தது.
17 |
ஈட்டமும்
வேறுமா யேந்தும் வேலெலாம்
வாட்டமும் வெருவுமாய் வைய மாடவுட்
கோட்டமும் வினைகளுங் குணித்த
பேய்கள்போ
ராட்டமு முழக்கமு மளவற் றாயதே. |
|
ஈட்டமும் வேறும்
ஆய், ஏந்தும் வேல் எலாம்
வாட்டமும் வெருவும் ஆய், வையம் ஆட, உள்
கோட்டமும் வினைகளும் குணித்த பேய்கள் போ -
ராட்டமும் முழக்கமும் அளவு அற்று ஆயதே. |
|