|
கூட்டமாகவும்
தனித்தனியாகவும் தாம் நின்று, தாம் ஏந்தும் வேல்
எல்லாம் மக்கள் கொள்ளும் மன வாட்டமும் அச்சமுமாகக் கொண்டு,
இவ்வுலகம் நடுங்கும் வண்ணம், மனக் கோணலையும் அதனால் எழும்
தீவினைகளையும் கருதி வந்த அப்பேய்களின் போராட்டமும் முழக்கமும்
அளவின்றி ஏற்பட்டது.
'போராட்டமும்
முழக்கமும்' குழு ஒருமையாய் நின்று, 'ஆயது' என,
ஒருமை முடிவு பெற்றது.
| 18 |
ஒளிமுகத்
திடமுநீ ருலகு நீறுமென்
றிளிமுகத் தெங்கணு மெரிசெந் தீயெழச்
சுளிமுகத் ததிர்ந்தபேய் தொடுத்த
வேலெலாம்
வெளிமுகத் திடையினீ றாக வீழ்ந்தவே. |
| |
ஒளி முகத்து இடமும்
நீர் உலகும் நீறும் என்று,
இளி முகத்து, எங்கணும் எரி செந் தீ எழ,
சுளி முகத்து அதிர்ந்த பேய் தொடுத்த
வேல் எலாம்,
வெளி முகத்து இடையின் நீறு ஆக வீழ்ந்தவே. |
அவ்விருவருக்கும்
இழிவு ஏற்படுமாறு, எங்கும் எரியும் செந்தீ எழவே,
ஒளி கொண்ட வானுலகும் நீர் சூழ்ந்த பூவுலகும் வெந்து சாம்பலாகுமென்று
கருதி, சினந்த முகத்தோடு முழங்கிய அப்பேய்கள் தொடுத்த
வேல்களெல்லாம், வான வெளியின் இடைவழியிலேயே சாம்பலாகி விழுந்தன.
| 19 |
சுரதமே கவசமாய்ந்
தேவ தூய்தயை
யிரதமே யெழுந்தவவ் விருவர் தம்புடை
விரதமே கதுவிடாப் புரிசை மேற்படப்
பிரதமே வெறியுறப் பிதிர்ந்த வேலெலாம். |
| |
சுரதமே கவசமாய்,
தேவ தூய் தயை
இரதமே எழுந்த அவ் இருவர் தம்புடை,
விரதமே கது விடாப் புரிசை மேல் பட,
பிரதமே வெறி உறப் பிதிர்ந்த வேல் எலாம். |
|