அறிவையே கவசமாகக்
கொண்டு, கடவுளின் தூய கருணை என்னும்
தேரின்மேல் ஏறி நின்ற அவ்விருவர் தம் பக்கத்தும், விரதம் என்னும்
வெடிப்பு விடாத மதிலின்மேல் பட்டதுமே, பேய்கள் கலக்கங் கொள்ளுமாறு
அவ்வேல்களெல்லாம் சிதறி அழிந்தன.
கலங்காத
இருவர்
20 |
புறத்தள
வகல்திருப் புதல்வ னாண்மையா
லறத்தள வுயரினோ ரழிவுற் றெஞ்சுகத்
திறத்தள வறிவுள பேய்கள் செய்ததீ
மறத்தள வமர்வகை வரைவி லாயதே. |
|
புறத்து அளவு அகல்
திருப் புதல்வன் ஆண்மையால்
அறத்து அளவு உயரினோர் அழிவு உற்று எஞ்சுக,
திறத்து அளவு அறிவு உள பேய்கள் செய்த தீ
மறத்து அளவு அமர் வகை வரைவு இல் ஆயதே. |
புறத்தே தனக்கு
அளவு ஒன்றுமில்லாத திருமகனின் வல்லமையால்
அறத்தின் அளவிலே உயர்ந்தோராகிய சூசையும் மரியாளும் அழிந்து
மெலியும் பொருட்டு, தம் வலிமையின் அளவுக்கு அறிவும் கொண்டுள்ள
பேய்கள் செய்த கொடுமையின் அளவுக்குத் தக்கவாறு, அவை செய்த
போரின் வகையும் வரையறை இல்லாததாயிற்று.
21 |
உள்ளிய
சமரெலா மொழிந்து ளங்கெட
வெள்ளிய குணுக்கின மேங்கி விம்மவுந்
தெள்ளிய மரபினோர் செருவெண் ணாதுளம்
விள்ளிய மகிழ்வறா விளங்கி னாரரோ. |
|
உள்ளிய சமர்
எலாம் ஒழிந்து, உளம் கெட,
எள்ளிய குணுங்கு இனம் ஏங்கி விம்மவும்,
தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது, உளம்
விள்ளிய மகிழ்வு அறா விளங்கினார், அரோ. |
தாம் கருதிய
போர் வகை எல்லாம் பயனற்று ஒழிந்து, அதனால்
மனம் மடிந்து, இகழ்ச்சிக்கு ஆளாகிய பேய்க்கூட்டம் ஏங்கி விம்மவும்,
|