பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்560

தெளிந்த இயல்புகொண்ட சூசையும் மரியாளும் அப்போரைப் பற்றியே
எண்ணாமல், தம் உள்ளத்தில் மலர்ந்த மகிழ்ச்சி நீங்காது விளங்கினர்.

     'அரோ' அசைநிலை.

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                   22
மின்னியம் புயக்கண் ணாதி வென்றவைம் பொறியைக்
                                        காத்தோர்
வன்னியம் பகையிற் பொங்கி வஞ்சக வெறிக ளார்த்துத்
துன்னியம் புயிர்த்த தீயாற் றுகளுறாக் கதுவி டாத
கன்னியம் புரிசை சூழ்ந்த கதவடைத் தரணைப் போன்றார்.
 
மின்னி, அம்புயக் கண் ஆதி வென்ற ஐம் பொறியைக் காத்தோர்,
வன்னி அம் பகையின் பொங்கி, வஞ்சக வெறிகள், ஆர்த்து,
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா, கது விடாத
கன்னி அம் புரிசை சூழ்ந்த கதவு அடைத்து; அரணைப் போன்றார்.

     ஒளிமிக்க தாமரை மலர் போன்ற கண் முதலாக வென்ற
ஐம்பொறிகளையும் அடக்கிக் காத்த அவ்விருவரும், வஞ்சகப் பேய்கள்
நெருப்புப் போன்ற பகையினால் பொங்கி முழங்கி, நெருங்கி வந்து
அம்புகளைப் பொழிவதால் எழுந்த தீயால் தாம் மாசுபடாமல் விளங்கி,
வெடிப்பினால் வழிவிடாத அழியாமை கொண்ட அழகிய மதிலைச்
சூழ்ந்த கதவுகளை அடைத்துக் கொண்டு, தாமும் ஒரு கோட்டைபோல்
அமைந்தனர்.

                      23
கருவினாற் கலங்கத் தெண்ணங் கயங்கெடத் தெளிவற் றன்ன
செருவினாற் கலங்க வுள்ளந் தெளிவறப் பங்க மாமென்
றுருவினாற் கலங்கத் தோன்றி யுடன்றபே யுளத்தி லன்னார்
வெருவினாற் கலங்கத் தம்முள் விளைத்தன வரும்போ ரன்றே.