கடம் மாறு இல
வெஞ்சின வேழமொடும், கனம் ஈரு கொடிஞ்சி
விமானமொடும்,
இடம் மாறி உகண்டன வாசியொடும், எரி ஊறிய வெங் கதம் ஆர்
விழியால்,
விடம் மாறு இல வெஞ்சிலை ஆதியொடும், விளை போர் உரி வாள்
வளைவேல் கவரும்
தடம் மாறு இல வண் கர வீரரொடும், சல ராசியின் தோன்றியது, ஓர்
படையே. |
பேய்களின் ஒரு
படை, மதம் மாறாத கொடுஞ்சினமுள்ள
யானைகளோடும், மேகத்தை அறுக்கும் தேர் மொட்டைக் கொண்ட
தேர்களோடும், இடம் மாறிக் குதித்த குதிரைகளோடும், நெருப்பு ஊறிய
கடுஞ்சினம் நிறைந்த கண்களோடு, நஞ்சு மாறாத கொடிய வில்
முதலியவற்றோடும், விளைகின்ற போருக்கு உரிய வாளும் சக்கரமும்
வேலும் தாங்கும் தடம் மாறாத தடக்கை கொண்ட வீரரோடும் கூடிக்
கடல் போல் தோன்றியது.
25 |
புழுவாய்வழி
கண்வழி கைவழியும் புனலொத்த வெரித்திர
ளூற்றுறநீண்
மழுவாய்வழி வேல்வழி வில்வழியும் மலியக்கிபு கைப்பம
தத்தவுவாக்
கெழுவாய்வழி பாய்பரி வாய்வழியுங் கிழிபட்டக னத்திடி
யொத்தெரிதீ
விழுவாய்வழி மண்வழி வான்வழியும் வெருவுற்றழ லச்சமர்
காட்டினவே. |
|
புழு வாய் வழி
கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரித் திரள்
ஊற்று உற, நீண்
மழு வாய் வழி வேல் வழி கை வழியும் மலி அக்கி புகைப்ப,
மதத்த உவாக்
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி
யொத்து எரிதீ
விழு வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழலச்
சமர் காட்டினவே. |
|