பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்563

     அப் பேய்கள், புழுத்த தம் வாய் வழியாகவும் கண் வழியாகவும் கை
வழியாகவும் நீரை ஒத்த நெருப்புத் திரள் ஊற்றெடுத்துப் பாயவும், நீண்ட
மழுவின் வாய் வழியாகவும் வேல் வழியாகவும் வில் வழியாகவும் மிகுந்த
நெருப்பைக் கக்கிப் புகையவும், மதங் கொண்ட யானையின் பெரிய வாய்
வழியாகவும் பாயும் குதிரையின் வாய் வழியாகவும் கிழிபட்ட மேகத்தில்
தோன்றும் இடியைப் போன்று எரியும் தீயையும் விழவிட்ட விடத்து,
மண்ணகமும் விண்ணகமும் அஞ்சுமாறு எரிய நின்று போர்த்திறம் காட்டின.


                      26
மேகங்கள்மெ லிந்தற வேகுமெனா மேகந்துறு கின்றிடி
                                     வேகுமெனா
மாகங்கள டங்கிலும் வேகுமெனா வானின் றிரி
                                 வெஞ்சுடர்வேகுமெனா
நாகங்களொ டும்புனல் வேகுமெனா நால்வம்பலொ டுங்கடல்
                                     வேகுமெனா
வேகங்களு ணர்ந்துளம் வேகுமெனா வேகங்கொடு வெந்திசை
                                     யோர்பொருவார்.
 
மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா, மேகம் துறுகின்று இடி
                                 வேகும் எனா,
மாகங்கள் அடங்கிலும் வேகும் எனா, வானின் திரி வெஞ்சுடர்
                                 வேகும் எனா,
நாகங்களொடும் புனல் வேகும் எனா, நால் வம்பலொடும் கடல்
                                 வேகும் எனா,
வகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு, வெந்
                                 திசையோர், பொருவார்.

     நெருப்புலகத்தோராகிய பேய்கள், மேகங்கள் மெலிந்து அறவே
வேகும் எனவும், மேகத்தில் செறிகின்ற இடி வேகும் எனவும், வானத்து
இடங்கள் முழுவதும் வேகும் எனவும், வானத்தில் திரியும் பகலவன்
வேகும் எனவும், மலைகளோடு அவற்றிற் பாயும் ஆறுகள் வேகும் எனவும்,
நாலு திசைகளோடு கடலும் சேர்ந்து வேகும் எனவும், அந் நெருப்பின்
வேகங்களை உணர்ந்து உள்ளமுமே வேகும் எனவும் கொள்ளத்தக்க
வேகங் கொண்டு போர் புரிவர்.