பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்564

                       27
தொடையுற்றவெ யிற்றழ லீட்டியபேய் தொடவொற்றைச
                                 ரத்தைய டற்றனுகோத்
திடையுற்றச தச்சர மாகிவிடு மிடையாயிர மாய்வெளி யிற்படருங்
கடையுற்றச ரத்தொடை கோடியுமாய்க் ககனத்தில ழற்றிய
                                         மாரியெனா
மிடையுற்றவ ழற்கிளர் நீத்தமெனா விரிதிக்குகள் முற்றுமெ
                                         ரித்தனவாம்.
 
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய், தொட ஒற்றைச் சரத்தை
                                   அடல் தனு கோத்து,
இடை உற்ற சதச் சரம் ஆகி, விடும் இடை ஆயிரம் ஆய், வெளியில்
                                   படரும்
கடை உற்ற சரத் தொடை கோடியும் ஆய், ககனத்தில் அழற்றிய மாரி
                                   எனா
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா, விரி திக்குகள் முற்றும்
                                   எரித்தன ஆம்.

     தொடுப்பாக அமைந்த தம் பற்களால் நெருப்பைக் குவித்துப்
பொழிந்த பேய்கள், ஓர் அம்பை வலிய வில்லில் கோத்துத் தொடுக்கவே,
வில்லினிடைச் சேர்ந்தபோது அது நூறு அம்புகளாய் மாறி, ஏவி விடும்
போது ஆயிரம் அம்புகளாகி, வான வெளியில் செல்லும்போது
அவ்வம்புகளே தொடுக்கப் பெற்ற கோடி அம்புகளாக மாறி, வானத்தில்
நெருப்பைப் பொழிந்த மழை போலச் செறிந்த நெருப்பினால்
கிளர்ந்தெழுந்த வெள்ளம் போல் ஆகி, விரிந்த திசைகள் முழுவதையும்
எரித்தன போல் தோன்றும்.

     'ஒற்றைச் சரம்' என்பது, ஓசைப் பொருட்டு, சந்தி கெட நின்றது.

                   28
கனிவீசிய மும்மதம் வீசியமால் கரிவாரின ரந்தரம் வீசினரே
வெளிவீசிய சிந்துர மார்த்தலற விசையோடுசு ழன்றுசு
                                       ழன்றுலவத்
துளிவீசிய மேதமொ டுங்கிடவுஞ் சுடரோன்வெரு விக்கடி
                                       தோடிடவும்
வளிவீசிய வூழியி லேறொடுவீழ் மழைபோனில மாடவும்
                                       வீழ்ந்தனதே.