பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்565

களி வீசிய மும் மதம் வீசிய மால் கரி வாரினர் அந்தரம் வீசினரே.
வெளி வீசிய சிந்துரம் ஆர்த்து அலற, விசையோடு சுழன்று சுழன்று
                                          உலவ,
துளி வீசிய மேகம் ஒடுங்கிடவும், சுடரோன் வெருவிக் கடிது ஓடிடவும்,
வளி வீசிய ஊழியில் ஏறொடு வீழ் மழை போல் நிலம் ஆடவும்                                           வீழ்ந்தனவே.

     தம் களிப்பைக் காட்டிய தன்மையாய் மூன்று வகை மதம் பொழிய
நின்ற பெரிய யானைகளை, அப் பேய்கள் வாரி எடுத்து வானத்தில் வீசி
விட்டனர். அவ்வாறு வான வெளியில் வீசப்பட்ட யானைகள் முழங்கி
அலறி, விசையோடு சுழன்று சுழன்று அங்கு உலாவவே, துளியைப்
பொழிந்த மேகங்கள் துளி மறந்து ஒடுங்கின; பகலவன் அஞ்சி விரைந்து
ஓடினான். அவ் யானைகள் காற்று வீசியடித்த உலக முடிவு நாளில்
இடியோடு சேர்ந்து விழும் மேகம் போல், நிலவுலகம் நடுங்குமாறு கீழே
வீழ்ந்தன.

     பேய்கள் உயர்திணையாகவும் அஃறிணையாகவும் கூறப்படுதலின்
இங்கு 'வீசினர்' என உயர்திணை முடிவு கொண்டன. அஃறினை முடிவு
முன் வந்தன கொண்டு அறிக.

                     29
சிறையோடுப றந்தப றம்பெனவோ திறலோடுப டர்ந்தவி
                            சும்பெனவோ
வுறையோடுக லந்திரு விண்டிடையூ ருருளோடுதி ரிந்திர
                            தந்திரளே
மிறையோடுவி ரிந்தன பொய்யெனவோ விரைவோடுப
                            டர்ந்துபொ திர்ந்துபொரக்
கறையோடுமி டைந்தெரி யுந்தழலக் கதமோடுச ரந்தொடு
                            வெஞ்சமரே.
 
சிறையோடு பறந்த பறம்பு எனவோ, திறலோடு படர்ந்த விசும்பு
                                     எனவோ,
உறையோடு கலந்து இரு விண்டு இடைஊர் உருளோடு திரிந்த
                                     இரதம் திரளே?
மிறையோடு விரிந்தன பொய் எனவோ, விரைவோடு படர்ந்து
                                     பொதிர்ந்து பொர,
கறையோடு மிடைந்து எரியும் தழலக் கதமோடு சரம் தொடு வெஞ்
                                     சமரே?