'மலைகின்று'
என வரவேண்டியது மோனைப் பொருட்டு 'மிலைகின்று'
என வந்துள்ளது.
வடுவன்
-மைந்தன் வீரப் போர்
கருவிளம்,
புளிமா, தேமா, கருவிளம், கருவிளம், புளிமா, தேமா, கருவிளம்.
31 |
ஒருபுடை யிலிற்றை
யாவு மிவரலி னுருவமு டனுட்கு வீச
வணியணி
இருபுடை யிலுற்ற சோகு மொலிதர வெதிருமெ திருற்ற
யாவு மறவமர்
தருபுடை யில்முற்றி வேகு மழலெழத் தகுதியி லகற்ற மாய
வினையொடு
வருபுடை யில்மற்றி யாரு மிணையற வடுவனொ டுமைத்தன்
வீர வமர்செய்வார். |
|
ஒரு புடையில்
இற்றை யாவும் இவரலின், உருவமுடன் உட்கு வீச
அணி அணி
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர, எதிரும் எதிர் உற்ற யாவும்
அற, அமர்
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ, தகுதி இல கற்ற மாய
வினையொடு
வரு புடையில் மற்று யாரும் இணை அற, வடுவனொடு மைத்தன்
வீர அமர் செய்வார். |
ஒரு பக்கம் இவை
யாவும் நடக்கையில், தம் உருவத்தால் அச்சம்
பிறக்குமாறு அணியணியாய் இரு பக்கமும் நின்ற பேய்களெல்லாம்
முழங்கவும், எதிர்த்திசையும் அவ்வெதிர்த் திசையிலுள்ள யாவும்
அழியுமாறும், போரைச் செலுத்தும் இடமெல்லாம் மூண்டு வேகச் செய்யும்
நெருப்புப் பிறக்குமாறும், அளவறக் கற்றறிந்த மாயச் செயல்களோடு
போருக்கு வருமிடத்து மற்றப் பேய்கள் யாவரும் தமக்கு ஒப்பில்லாது
கெடவுமாக, வடுவன் என்னும் பேயோடு மைத்தன் என்னும் பேயுமாகிய
அவ்விருவரும் தமக்குள் வீரப் போர் புரிவர்.
|